பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

சமூக சேவைப் பண்பு — அபலைப்பெண்களுக்கு ஆதரவு நல்கும் பரோபகாரம் — ஏழை எளியவர்கட்கு உபகாரியாகும் பாசம் போன்ற அற்புதமான குணச் சேர்க்கைகொண்ட உங்களைப் புருஷனாக அடையப் பேறு பெற்ற பூவழகி — என் உடன் பிறவாச் சோதரி — கொடுத்து வைத்தவள். அவள் என்னுடைய அன்புச் சிநேகிதி. நானும் அம்மாவும், இந்த சோமசேகர் ஐயா அவர்களின் புண்ணியமான கருணையினால் ஒரு கிராமத்தில் இருக்கையில், பூவழகி எங்களுக்காக உதவியிருக்கிறாள். உங்கள் அப்பாவின் உதவியை நாங்கள் மறக்கவே முடியாது. என் அக்காளுக்கு ஒரு அத்தான் கிடைத்துவிட்டார். எனக்கு ஒரு அண்ணன் கிடைத்து விட்டார் !”...என்று அவள் — குழலி — எழுதிய கடிதத்தை ஞானபண்டிதன் மீண்டும் நினைத்துக்கொண்டான்.

மறுதினம் :

குழலியின் பிறந்த நாள் விழாவை மிகவும் சிக்கனமாக நடத்தினர்கள். தெய்வ வழிபாடு மட்டும் தாராளமாக நடந்தது.

பெரியவர் ஆனந்தக் கண்ணீருடன் குழலியை ஆசீர்வாதம் செய்தார்.

“ஐயா உன் அப்பாவாட்டம். விழுந்து நமஸ்காரம் செய்யம்மா ! ஞானபண்டிதனுக்குக் கும்பிடு கொடு !” என்று தெரிவித்தாள் அன்னபாக்கியத்தம்மாள்.

அவ்வாறே இருவருக்கும் தாழ்ந்து வணங்கி, நமஸ்காரங்களைத் தெரிவித்தாள் குழலி.

அன்னபாக்கியத்தம்மாள் மகிழ்வின் மேலீட்டினால் லேசாக விம்மினாள். தன் பங்குக்கும் அவள் தன் புதல்வியை வாழ்த் தினாள்.

அழகிய நெக்லஸ் ஒன்றைக் குழலிக்குப் பிறந்த நாள் பரிசிலாகக் கொடுத்தான் ஞானபண்டிதன்.

தம்பி, உன்னே உன் துணையுடன் மணக்கோலத்திலே பார்க்கும் அதே நேரத்தில் குழலியையும் தன் கணவனுடன் மணக்கோலத்திலே பார்க்கத் துடிக்கிறேன் நான். நீயும் உன் மனனைவியும் — குழலியும் அவள் கணவனும் புனித மயமான நிறைவுடன் தீவலம் வரும் அற்புதக் காட்சியைக் கண்டு விட்டால் என் பிறப்பு பலன் பெற்றதாகிவிடும் !” என்றாள்.