138
அவர் “நம்ப குழலிக்கு எங்கே புருஷனைப் பிடிச்சுப் போட்டிருக்கோ பகவானுக்குத்தான் தெரியும் !” என்றார் அவர்.
குழலியின் மனத்துக்குப் பூரணம் நல்கும் மாப்பிள்ளையை ‘செட்டில்’ செய்வதே தன் முதல் கடமை என்றான் ஞானபண்டிதன்.
அப்போது எழுத்தாளன் காளமேகம், ஆனந்தத் துள்ளலுடன் ஞானபண்டிதனைத் தேடி வந்தான்.
நண்பனை வரவேற்றான் அவன்.
‘விளையாட்டுத் தோழி’ கதையைப் பற்றிப் பேசினார்கள்.
அப்போது ஞானபண்டிதனின், குறிப்புப்படி காப்பி கொணர்ந்தாள் குழலி.
அவளைக் கண்டதும் “ஆ, நீயா ?” என்று கூவிவிட்டான் காளமேகம்.
குழலிக்கு, அவன் பழைய நிகழ்ச்சியை நினைவூட்டியதும் நினைவு துலாபாரமாக மின்னிப் பளிச்சிட்டது.
“நாம் ரெண்டு பேரும் ‘டூ’ போட்டுப் பிரிஞ்சோம். இப்போ ராசி ஆகிடுவோம். உங்க சம்மதத்தோடு ராசி ஆகிடுறோம், மிஸ்டர் ஞானபண்டிதன் !” என்று உணர்ச்சி வசப்பட்ட, குதூகலக் குரலெடுத்துச் சொன்னான் காளமேகம்.
“ஆஹா !” என்றான் ஞானபண்டிதன்.
‘டூ’ போட்ட அவளுடைய தளிர் விரலை ‘ராசி’ செய்து, தன் விரலையும் அவள் விரலுடன் கோத்து மகிழ்ந்து அவன் பங்கிற்கும் ராசி ஆகிவிட்டார்கள்.
மறுவினாடி, குழலி, நாணம் சிரிக்க, அன்பு சிரிக்க, ஓட்டமாகி ஒடிப் பூஞ்சிட்டு ஆனாள்.
இக்காட்சியில் லயித்துவிட்டிருந்த ஞானபண்டிதன், திடுமென்று தனக்குத்தானே பேசிக்கொண்டான். ‘எஸ்...! குழலியோட கல்யாணப் பிரச்னையும் தீர்ந்த மாதிரிதான்! ஸிஸ்டர் சம்மதம் சொல்லிட்டா, எல்லாம் சரிதான் !