பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

எழுத்தாளர்ன்னா எவ்வளவு ஒசத்தியானவர் !... அப்பாகிட்டவும் காளமேகத்தை அறிமுகப்படுத்திடலாம் !’ என்று மனத்திற்குள்ளாக ஆராய்ந்து முடிவு எடுத்துக்கொண்டு, பெரியவரிடம் காளமேகத்தை அறிமுகப்படுத்தினான்.

அப்போது குழலியின் நாணத்தை எட்டி நின்று பார்த்து, ‘இனம்’ கண்டுகொண்டான் ஞானபண்டிதன்.