பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ஏமாற்றிவிட முடியுமா ?” என்றும் மீண்டும் ஒரு கேள்வியைச் சொடுக்கினார் அவர்.

“முடியாது!” என்றான் ஞானபண்டிதன் : “முடியாதுங்க அப்பா !...”

“பேஷ்! என் கட்சிக்கு என்னுடன் நீயும் சேர்த்தி !” என்று குதித்தார் பெரியவர்.

மாலையில் வெளியில் புறப்படு முன்னம் ஞானபண்டிதன் பெரியவரிடம் சொல்லிக்கொள்ள வந்தான்.

தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னே சோமசேகர் நின்றது நின்றவாறு, அண்ணலின் படத்தின் முன்னே செருமிக் கொண்டிருந்தார்.

ஞானபண்டிதன் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்தார்.

“அழுதீங்களா, அப்பா ?”

“ஆமா தம்பி ; உன் அம்மாவை நெனைச்சுக்கிட்டேன் ! அழுதிட்டேன் !”

ஞானபண்டிதனுக்கும் அழுகை வந்துவிட்டது : “அம்மா ! அம்மா !”