உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அவளும் உண்டியலில் போட்டார்கள். அக்குழுவில் சிறு பொழுது அவர்கள் இருவரும் சேர்ந்து உண்டியல் குலுக்கினார்கள். “என் நாட்டுக்காக நான் ஆற்றிடவேண்டிய சேவையின் கடமையை எப்படியும் கூடிய சீக்கிரம் செய்துவிடுவேன். நாளைக்கே நிலை மோசமானால், நான் கட்டாயம் போரில் பங்கு பெற்றே தீருவேன். என்னுடைய இம்முடிவுக்கு நீ எப்போதும் தயாராயிருக்க வேண்டும், பூவழகி !... நாம் மணவறையில் இருக்கும் போதோ, அல்லது தீவலம் வரும் போதோ போர் நெருக்கடி விளைந்தால், உடனே நான் புறப்பட்டாக வேண்டும்!” என்றான் ஞானபண்டிதன்.

“உங்கள் இஷ்டம்தான் என் பாக்கியம், அத்தான்!” என்றாள் பூவழகி. “அது என் கடமை மட்டுமல்ல ; அது என் பாக்கியமும்கூட!” என்றும் தொடர்ந்தாள்.

அவனுக்கு அவள் பேச்சு ஆறுதலாகவும் பெருமையாகவும் இருந்தது .

இருவரையும் சுமந்த கார் பறந்தது.

இருள் கழிந்தது.

ஒளி கூடியது.

அவர்கள் பங்களா முகப்பில் காரை விட்டு இறங்கினார்கள்.

அவள் தன் அறைக்குச் சென்றாள்.

அவன் உள்ளே சென்றான்.

துணி மூட்டையை டிரைவர் எடுத்து வந்து ஹாலில் வைத்தான்.

ஞானபண்டிதன் மாடிக்குச் சென்றான்.

பெரியவரின் அறையை எட்டிப் பார்த்தான்.

பெரியவர் படுக்கையில் சுருண்டு கிடந்தார். அவர் பக்கத்தில் அன்னபாக்கியத்தம்மாள் உட்கார்ந்திருந்தாள். சோகமே வடிவமாக இருந்தாள். நெற்றித்திலகம் எடுப்பாக இருந்தது. கழுத்துத்தாலி மங்களகரமாகப் பொலிந்தது.

பெரியவர் விம்மினார்.

அந்த அம்மாள் அவரது விழி வளையங்களில் செறிந்திருந்த கண்ணீர் மணிகளைத் துடைத்தாள். “உடம்புக்கு ஒண்னுமில்லேங்க. டாக்டர் கொடுத்த மாத்திரைகளைச்