பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


பூ விரல்கள்

ண்மை, என்றென்றும் உண்மைதான் ! — ஆனால், சந்தர்ப்பங்களின் நெருக்கடியை அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் பயங்கரத்தன்மையைத் தாள முடியாத கட்டங்களிலே, மனிதனின் அறிவுக்கப்பாற்பட்ட பலஹீனம், மேற்படி உண்மையானது பொய்யாக மாறிவிடலாகாதா என்று எண்ணத் தூண்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு தூண்டுதலில் தான் ஞானபண்டிதன் மனம் மறுகி, அப்படியே நிலையாக நின்றது நின்றபடி நின்றான்.

இன்னமும் அன்னபாக்கியத்தம்மாள் அப்படியேதான் பெரியவர் பக்கத்தில் இருந்தாள். அந்த அம்மணி துணிந்து பெரியவரது கண்ணீரைத் துடைத்த விஷயத்தை அவன் வியந்தான் ; அந்தத் தூய அன்பைப் போற்றினான்!

அவனால் பொறுக்கக்கூட முடியவில்லை.

“அப்பா !” என்று அலறியபடி உள்ளே போனான் அவன். அன்னபாக்கியத்தம்மாள் மெல்ல எழுந்தாள். “வா தம்பி !” என்றார் பெரியவர்.

அவன் மெத்தையை ஒட்டிக் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவர் மெல்ல எழுந்து திண்டில் சாய்ந்தார். அவர் அன்னபாக்கியத்தம்மாளைப் பார்த்தார்.

அந்த அம்மணி புறப்பட்டு நகர்ந்தாள்.

பெரியவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.

மேஜை விளக்கின் வெளிச்சத்தில் இருந்த சாத்துக்குடிப் பழத்தை உரித்தான் ஞானபண்டிதன். ஒரு சுளையை அவரிடம் நீட்டினான். அவர் வாயில் போட்டுச் சுவைத்தார்.

நாளது தேதிவரையுள்ள வரவு செலவு கணக்கு விவரம், இருப்பு, சுரங்கத்தின் நிலை, பாங்க் சேமிப்பு போன்று எல்லா