பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சப்இன்ஸ்பெக்டர் மாடிக்கு வர சற்று நேரமாகியிருந்தால் கூட சோமசேகரை அந்தச் செங்கோடன் கைத்துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருப்பானே !

செங்கோடனைக் கையும் களவுமாகப் பிடித்தார்கள். அவன் பிடிபட்டபோது, “சோமசேகர் பெரிய கொலைகாரன் ஐயா !... அதோ அந்தப் பெட்டியைத் திறந்து பாருங்கள். அது டேப் ரிகார்ட் பெட்டி !...” என்று கரடியாகக் கத்தினான் செங்கோடன். ஆனால், அவன் பேச்சு எதுவும் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செவிகளில் ஏறவேயில்லை.

“அப்பா ! அப்பா !” என்று பயந்த குரலில் விம்மினான் ஞானபண்டிதன்.

அங்கு பூவழகி, அன்னபாக்கியத்தம்மாள், குழலி ஆகியோர் கூடினர்.

“ஏம்மா பூவழகி! நீ தானே முரடன் செங்கோடன் வந்ததும் போலீசுக்குப் போன் செஞ்சே?” என்று சரியாகக் கேள்வியைக் கேட்டார் பெரியவர்.

“ஆமாங்க!” என்று பூவழகி தலை தாழ்த்தினாள்.

ஞானபண்டிதன் அவளை நன்றியறிவு மிளிரப் பார்த்தான்.

“எனக்கு இனி பயமில்லே! எல்லாரும் அவங்க அவங்க அறைக்குப் போய்த் தூங்குங்க!” என்று சொல்லிவிட்டு, சோமசேகர் படுக்கையில் படுத்தார்.

எல்லோரும் புறப்பட்டார்கள்.

மறுபடி, என்ன நினைத்தாரோ, “தம்பி !” என்று அலறினார்.

ஞானபண்டிதன் வந்தான்.

“உன்கிட்ட தர்றதுக்குத்தான் இந்த டேப் ரெகார்டரை எடுத்து வெளியே வச்சேன். ரொம்ப நாளா இது பேரிலே குறிவைச்சிருந்த செங்கோடன், இன்னிக்கு இதைக் கண்டதும், வெறிபிடிச்சுக் கத்திட்டான். இது அவன் கையிலே கிடைச்சிட்டால், அப்புறம் அவன் பாடு வேட்டைதான்! இதை எடுத்துக்கிட்டு ஒடத்தான் என்னைச் சுடுறதுக்கு முனைஞ்சது எல்லாம் ! அதுக்குள்ளே போலீஸ் வந்திட்டுது !... உட்கார் தம்பி, போட்டுக் காட்டுறேன் ... இந்தப் பங்களாவிலே நடக்க