உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

“என் கஷ்டங்களுக்குள் ஒரு நல்ல பொழுதாக இந்தச் செங்கோடன் இலங்கையில் சிறையில் போட்டுவிட்டார்கள் பல காலம் !”

“உன்னை என் சொந்த மகனாகவே வளர்த்தேன்!”

“தீயவனான என்னை என் மனச்சாட்சியும் மகாத்மா காந்தியும் தெய்வமும் நல்லவனாக மாற்றினாலும், என்னுள் இம்மி அளவுகூடச் சாந்தி பிடிக்கவில்லை.”

“அதற்கேற்றாற்போலச் சில வருஷங்கட்கு முன் விடுதலை பெற்று வந்த செங்கோடன், என்னைக் காட்டிக்கொடுத்து விடுவதாகப் பயமுறுத்தி, அவ்வப்போது நூறு, இருநூறு என்று பணம் கறந்து சென்று வரத்தொடங்கினான்.”

“எல்லாம் ஏன் தெரியுமா ?”

“நான் கோழை அல்ல!

என் மனைவியிடமும் என் மகளிடமும் நான் மனம் திருந்தியதை நிரூபித்துக் காட்டி, உன்னையும் ஆளாக்கிவிட்ட ஆனந்தமான பேரமைதி பெற வேண்டுமே என்பதற்காகத் தான்!”

“என் மனைவி யார் தெரியுமா ?”

"அதோ, விருந்தினர் விடுதியில் இருக்கிறாளே அன்னபாக்கியம், அவள்தான் என் மனைவி — ஆருயிர் மனைவி !... அவள் சத்தியம் ! அவளே தர்மம் !...”

“என் மகள்தான் குழலி !”

“என் மகளை உன்னிடம் ஒப்படைத்துவிடத்தான் நான் சொப்பனம் கண்டேன்.”

“ஆனால், அன்றிலிருந்து இன்று வரை என் மகனாகவே ஆகி விட்ட உன்னை, எப்போதுமே என் மகனாவே அமர்த்திக்கொண்டு விடவே பிறகு முடிவு செய்துகொள்ளத் தொடங்கிவிட்டேன்.”

“நான்தான் தனக்குத் தந்தை என்ற உண்மையை என் மகள் குழலி அறியவே மாட்டாள், இது பரியந்தம் !”

“நான் செய்த பயங்கரமான குற்றத்துக்குத் தண்டனையை நீ தான் எனக்கு அருள வேண்டும். அதுவே முறை — நியதி !...”

“அன்று என்னை வாழ்வித்த என் உயிர் நண்பன் செந்திலுக்கு இந்தச் ‘செந்தில் விலாசம்’ என்றுமே ஒரு நினைவுக்கூடம் !”