159
“உன் கருணை, என் மனைவியையும் என் மகளையும் என்றும் வாழச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கக்கூட எனக்கு வெட்கமாயிருக்கிறது, தம்பி ...!”
“ஐயோ, நான் பாவி! மகாபாவி ! உன்னை அனாதையாக்கி விட்ட கொடும்பாவி !... இருபத்தைந்து வருஷத்திய என் நரக வேதனைக்கு — எனது மன்னிக்க முடியாத பெரும்பாவத்துக்கு — இதோ முடிவு கிட்டப் போகிறது!...என் தவற்றுக்கு நான்என் தண்டனையை அனுபவிக்காவிட்டால் அப்புறம் தர்மத்திற்கு அர்த்தமில்லால் போய்விடுமே !...”
அத்துடன் நின்றுவிட்டது ஒலி.
விடிவெள்ளி முளைத்தது.
ஞானபண்டிதன் வேர்வையைத் துடைத்துக் கொள்ளக்கூட மனமின்றி அப்படியே சிலையாக நின்றான். “ஐயோ, நான் அனாதையாகிவிட்டேனே !” என்று அலறிக்கொண்டே, மண்டையில் அடித்துக்கொண்டான். மறு வினாடி, நான் அனாதையா ?... அல்ல. ! என் நிமித்தம் — தர்மத்தின் நிமித்தம்கொண்ட புருஷனுக்கு — கட்டிய கொலைகாரக் கணவனுக்கு ஒரு நீதியாகவும் ஒரு விதியாகவும் இருந்து, அறவலி கொண்டு, வனவாச வாழ்வு வாழ்ந்து நிருத்துவிட்ட அன்னபாக்கியத்தம்மாள் இருக்கையில், என் அன்னையாக அவர்கள் இருக்கும் போது நான் அனாதையா ? ஊஹூம், இல்லை! அவர்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டவனல்லவா ? பெரியவரை அவர்களே மன்னித்துவிட்ட பின், வேறு என்ன புது முடிவு வேண்டும் ? அப்பா! ...அப்பா ! என்று உணர்ச்சிப் பெருக்குடன் தன்னுள் பேசியவாறு, அவன் கண்களைத் திறந்து பார்த்தான்.
அங்கே பெரியவர் சோமசேகர் இல்லை. ஓடினான்.
அப்போது, “ஐயையோ ! என்ன ஏமாற்றுப்பிட்டீங்களே அத்தான்!” என்று கூவியபடி, வீழ்ந்துவிட்ட சோமசேகரின் பாதங்களில் விழுந்து புரண்டு கதறினாள், அன்னபாக்கியத்தம்மாள்.
“ஐயோ அப்பா !” என்று ஓலமிட்டபடி அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் ஞானபண்டிதன்.