பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

சுக துக்கம், சுழல் சக்கரமென்பார்கள்.

உண்மைதான்.

சிவஞானத்துக்கும் இம்மூதுரை பொருந்தும்.

ஆனால், அவனது துயரம் அனுபவரீதியில் அளப்பரிய துயரமாகவே இருந்தது. இதை சுய அனுபவத்தின் மூலமாக உணர அவனுக்குத் துணையாக இன்னோர் ஆத்மாவும் இருந்தது. அந்தத் துணைதான் ரிக்ஷா ராமையா ! துக்கத்திற்கு வாய்த்திட்ட சுகமா அவன் ? அவன் பேச்சு இப்படிப்பட்ட துணிவுடன் —— தூய்மையுடன்—— நியாயத்துடன் எப்படித்தான் வெளி வந்ததோ ?

ராமையா தன்னிடம் பேசி முடித்த அக்கணத்திலும் அதையடுத்த சில விநாடிகளிலும் தன்னுள் ஒரு புதிய தெளிவு ஏற்படத் தொடங்கியிருப்பதாக உணர்ந்தானே சிவஞானம், அந்தப்புதுத் தெளிவு எப்படி ஏற்பட்டது ?... குழந்தையோடுஆறு மாதச் சிசுவோடு அவன் இந்த முப்பது தினங்களிலே, அதாவது மல்லிகா——சிவஞானத்தின் மல்லிகா——விதி வழி ஏகிவிட்டபின் நிலவிய இந்த முப்பது தினங்களில் அவன் பட்ட தொல்லைகள்—— தன்னால் அத்தொல்லைகளை இனிமேல் சாமான்யமாகச் சமாளிக்க முடியாது என்கிற ஒரு நிர்ப்பந்தம் ஒரு பரிகாரம் கண்டு கொண்ட அமைதி காட்டிய புதிய தெளிவா அது?

ஆனால், தோன்றிய புதிய அத்தெளிவு——தோற்றுவிக்கப்பட்ட அப்புதுத் தெளிவு——பின்னர் எப்படி மறைந்தது? ஏன் மறைந்தது? அந்நிலையின் திரிபுக்கு அவனது மனம்தான் காரணமோ, அன்றி, அவனது உள்ளச் சான்றேதான் உடந்தையா...?

காவடிப்பாரம், சுமப்பவனுக்குத் தெரியும் !

அப்படியென்றால், குழந்தை அப்பனுக்குச் சுமையாகத் தெரிந்ததா?

ஐயையோ!... என் ரத்தத்தின் ரத்தம், சுமையா? இல்லை, இல்லவே இல்லே, கடவுளே !... நான் வணங்கும் என் மனச்சாட்சியின் ஆணையாக அப்படி நான் நினைக்கவேயில்லை... என் மனத்தை வேள்வித் தீயாக்கி,என் மன எண்ணங்களை அக்கினிப் பிரவேசம் செய்து பார்த்த போது, இப்படிப்பட்ட விசித்திரச்

க. ம.——3