பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

என்கிறதுதான் என் யோசனை. நானே அனாதை. இந்த நிலைமையிலே, என் சொந்தக்காரங்க யாரும் எனக்கு உதவ முன் வரவில்லே. அதனாலேதான் இத்தனைக் குழப்பம் !... ஆயாவாக வருகிறவள் நல்ல மனம் கொண்டவளாய் வந்திட்டால் என் லட்சியம் பூர்த்தியாகிவிடும். மற்றப்படி, இரண்டாம் தாரம் கல்யாணம் கட்டிக்கிடுறதாய் எனக்கு இதுவரை நினைப்பே ஒடல்லே ! மல்லிகா மகாலக்ஷமியாக வாசம் செஞ்ச மனசு இது !... என்னைப் பார்த்தால் அதிசயமாயிருக்கும் !”

சிவஞானத்தின் இப்பேச்சுத்தான் ராமையாவைத் தீர்ப்பு வழங்கச் செய்ததோ !

அப்படியென்றால், ராமையாவின் நிலை என்ன ? அவன் தன் குழந்தைக்கு இரண்டாவது அம்மாவை நியமிக்கத்தான் போகிறானா ?

சிவஞானத்தின் நெஞ்சம் மீண்டும் மிண்டும் தவித்துக் குழம்பியது.

குழந்தை ‘அம்மா !’ என்று அழைத்தது :!

சிவஞானம் பதறிமனான் !

நிலவின் மாயக் கவர்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா?