பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


வாழ்க்கை ஓர் ஆல்பம்! ...

வாழ்க்கை என்பது ஒரு புகைப்படத் தொகுப்புப் புத்தகம்.

வாழ்க்கைக்குச் சம்பவங்கள் சாட்சியாகின்றன ; அந்தச் சம்பவங்களுக்குச் சாட்சி சொல்லுபவை புகைப்படங்கள்.

வாழ்க்கையில் சிரிப்பு வரவழைத்துக்கொள்ளப்படுகிறது. இதுவே பெரும்பகுதியானதொரு யதார்த்த நிலை.

படப்பிடிப்புக்கு ஆயத்தப்படும் போது, சிரிப்பு வரவழைத்துக்கொள்ளப்படுகிறது. இதுவே உண்மையான இயல்பு.

எடுக்கப்பட்ட படங்கள், நடந்த சம்பவங்களின் நடக்கின்ற நிரூபணமாகி ‘ஆல்ப’த்தில் ஒட்டப்படுகின்றன. ஒருசில படங்கள் ஒட்டப்படுவதற்கென்றே வெறுமையாக விடப்பட்டிருக்கும். அவை எதிர்கால வாழ்க்கை நடப்பிற்கு எடுத்துக்காட்டு.

வருங்காலம் எப்படி, யாருடைய சூட்சுமப்புத்திக்கும் புலனாகாதோ - புலனாக முடியாதோ, அது போன்றே, ‘ஆல்ப’த்தில் ஒட்டப்படவிருக்கும் படங்களின் தன்மைகளையும் யாரும் விண்டறியக்கூடுவதில்லை.

அதுதான் ‘ஆல்ப’த்தின் புதிர் விளையாட்டு.

வாழ்க்கையின் புதிர் வேடிக்கைக் கூத்தும் அதுவேயன்றோ ?... .

சிவஞானம், பிள்ளைக்கு ‘கிரைப் வாட்டர்’ கொடுப்பதற்காகத் தோல் பெட்டியைத் திறந்த போது, அவன் கையோடு ‘கிரைப் வாட்டர்’ சீசா மட்டும் வரவில்லை : ஒரு நிழற்படமும் கூடவே வந்தது. அப்படத்தைப் புறம் பார்த்துத் திருப்பிய போது அவனது கைவிரல்கள் தீயைத் தீண்டின அமைப்பில்