பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7.


வரம் கேட்டாள்

ஷணப் பித்தம் - ஷணச் சித்தம் என்பார்களே, அந்நிலையின் மயக்கத்துக்கு விலக்கு விதி சொல்லாத மானிடப் பிறவியே இல்லை என்று கணிக்கப்படும் பொழுது, சராசரி மனிதனான சிவஞானம் மாத்திரம் விதி விலக்காமல் இருந்ததில் வியப்பு இல்லைதான்!

விஜயாவையும் அவளது அழகுத் தாலியையும் அவளருகில் கருவம் பொங்கக் காட்சியளித்த அவள் கணவன் சபேசனயும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சிவஞானத்தின் மனம் அப்பொழுது தன்னுடைய பிரமசாரி கோலத்தில் போய் நின்றது. 'விஜயா !” - அவன் உதடுகள் முனு. முனுத்தன. உதட்டின் எரிச்சல் அடங்கிவிட்டிருந்தது.

சிவஞானம் கூப்பிட்டான். கூப்பிட்ட குரலுக்கு ஏன் ? என்று ஓடோடி வந்தாள் விஜயா. "அத்தான்!"' என்று பதிலுக்குக் கூவிய வண்ணம் வந்தாள் அவள், அவனது மன அரங்கத்திலே!

அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லே.

அவள் அன்புடன் தோன்றினாள். ஆட வந்த பொற்பாவையாக அவனது உள்ளத்தில் ஆடினாள். அழகு ஆட, அன்பு ஆடாமல் திகழ்ந்தாள். பேசும் விழிகளும் பேசவைக்கும் கனவுகளும், முல்லை நகையும், முறுவல் சிந்தும் மோனலயமும் சிந்து பாட விளங்கினள்.

காலம் ஒரு செப்பிடுவித்தைக்காரன்.

முன்னே கழிந்த காலத்தை கழித்துவிடாமல் காட்டினான். அச்செப்பிடுவித்தையாடி.

பட்டுக்கோட்டை, சிவஞானத்தின் முன் தோன்றியது.

செட்டித் தெருவில் வெங்கடாசலத்தின் ஒரே மகள் விஜயா. அவள் பிறந்துதான் தந்தைக்கு ஜெயத்தை அள்ளிக்