பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கொடுத்தாள். இரண்டாவது உலக மகாயுத்தம், அவரது சாதாரணமான இரும்புக் கடையைப் பொற்குவைக் கூடமாக மாற்றியது.

அவரது சொந்தத் தமக்கையின் மைந்தன்தான் சிவஞானம். தாய் தந்தையரின் முகங்களேக் காணப் பேறு பெறாத அவனுக்குத் தாய் மாமன் ஆதரவானர். அவரது நிதியுதவிதான் அவனுக்குப் பட்டம் சூட்டியது. படிப்புக் காலத்தில் பெரும் பகுதி அவனுக்கு ஹாஸ்டல் வாசமே கிட்டியது. விடுமுறைகளில் மட்டுமே அவன் மாமன் வீட்டுக்கு வருவான். வரும் போதெல்லாம் அவனுடன் பாசத்தோடு பழகி வந்தாள் விஜயா. 'அத்தான், அத்தான் ! என்று முத்து உதிர்ந்த மாதிரி அழைத்தாள். அவன் வரை அவள் 'கடல்முத்’தாகவே பொலிந்தாள். அப்பொலிவுதான் அவள்பால் பின்னர் முதற் காதற் கொள்ளவும் தூண்டியது. அவளும் அவனே இதய பூர்வமாகவே நேசித்தாள்.

ஆனால், விதியின் தீர்ப்பு வெங்கடாசலத்தின் வாய்மொழியாக வந்து தீர்ந்தது. "சிவஞானம், உனக்கு அறந்தாங்கியில் பெண் பார்த்து என் செலவில் கல்யாணம் செஞ்சுவைக்கிறேன். விஜயாவுக்குத் திருச்சியில் மாப்பிள்ளே தயாராக இருக்காங்க. நகைக் கடை நல்லக்கண்ணு செட்டியாரின் மூன்றாம் மகன்தான் விஜயாவுக்கு மாப்பிள்ளை. பெயர் சபேசன் ! உனக்கு நான் யோசித்திருக்கும் பெண் மல்லிகா. அதுக்கும் தாய் தகப்பன் இல்லை. அவங்க பெரியம்மா வீட்டிலே இருந்துக்கிட்டு வருது. நம்ம விஜயா மாதிரியே அதுவும் எஸ். எஸ். எல். ஸி. படிச்சிருக்குது. கண்ணுக்கு லட்சணமான பெண் அது!" என்றார்.

சிவஞானத்துக்குப் பேரிடியாக இருந்தது அப்பேச்சு. தன் முதற்காதல் எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு தோல்வி கண்டதில் அவன் மாளாத் துயர் எய்தி மறுகிக் குமைந்தான். அன்றைக்கே மாமன் வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போய்விட வேண்டுமென்று துடித்துத் தவித்தான். அதற்குத் தோதாக, சென்னை விமலா அச்சகமும் அவனுக்கு வேலை உத்தரவை அனுப்பி வைத்தது. விஜயா கண்ணீருடன் ரூபாய் நூறு