பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

கொடுத்து அவனே வழியனுப்பி வைத்தாள். சதா சர்வகாலமும் சிரிப்பும் சிருங்காரமுமாக இருக்கும் விஜயா, அன்றுதான் முதன் முதலாகக் கண்கலங்கிப் பார்த்தான் அவன். அத்தான், வாழ்க்கை என்கிறது சிரிக்கிறதுக்குத்தான் உண்டானது. உங்க அன்பும் பாசமும்தான் என்னைக்கூட இப்போ சிரிக்க வைக்க முடியாமல் தவிச்சுக்கிட்டு இருக்குது. நீங்க வாழ்க்கை பேரிலே நம்பிக்கை வையுங்க. அந்த வாழ்க்கை உங்க மேலேயும் நம்பிக்கை வைக்கும். மாமன் மகள் விஜயா உங்களை எப்பவும் மறக்க மாட்டாள்! ... என்னோட உதவி எப்ப உங்களுக்குத் தேவைப்பட்டாலும், கூசாமல் கேட்கலாம் நீங்க. அதுக்கு உரிமை உங்களுக்கு எப்பவும் உண்டு !...” என்று ஆறுதல் புகன்றாள் விஜயா.

காலம் ஒடியது.

சிவஞானம் சென்னைப்பட்டினமே சதம் என்று ஆனான் ஆனாலும், அவன் வசம் சேர்ந்திருந்த பணம் அவனுக்குத் திருமணம் செய்ய முன்வந்தது. ஒரு முறை தன் மாமன் சொன்ன அறந்தாங்கிப், பெண்ணப் பற்றிய தகவல ஞாபகப் படுத்திக்கொண்டான். உடனே, அப்பெண் விஷயமாக அவளது. பெரியம்மா வீட்டுக்குக் கடிதம் போட்டான். போட்ட கடிதம் அவனுக்கு நல்ல பதில் கொணர்ந்தது. மல்லிகா அவனுக்குக் கிட்டிவிட்டாள்.

விஜயாவின் திருமண அழைப்பு வந்ததும், தம்பதி சமேதராக அவ்வதுவை விழாவுக்குச் செல்லவே திட்டமிட்டிருந்தான். கடைசியில், எப்படியோ தன் திட்டத்தை அவனே மாற்றியும் கொண்டான்.

அன்றைக்குத்தான் அவன் விஜயாவையும் அவள் கணவன் சபேசனயும் கண்டான். மகிழ்வு கொண்டான்.

"அத்தான் ! நானும் உங்க கல்யாணத்துக்கு வரமுடியலே. அதே போல், நீங்களும் என் கல்யாணத்துக்கு வராமல் இருந்திட்டீங்க காலம் நம்மளைத் திசைக்குத் திசையாய் மாற்றிப்பிடிச்சு. ஆனாலும், உங்களையும் உங்க சம்சாரத்தையும் சந்திச்சதிலே எனக்கு ரொம்பவும் நிம்மதி. மல்லிகா