பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

நான் வர நேர்ந்திச்சு. இவங்களே வளர்க்கிறதுக்கு பட்டணத்திலே எத்தனையோ ஆயாக்களே நியமிச்சுப் பார்த்துத் தோல்வி அடைஞ்சப்பறம்தான் நான் இப்படித் திரும்பினேன். வந்த ஆயாக்கள் ஒவ்வொருத்தியும் பணத்தையும் சாமான் பண்டத்தையும் சுருட்டுறதிலேதான் கண் வச்சாளுங்க ... இதுகளைப் பத்தி லவலேசமும் கருத்துக் கொள்ளலே !... இவங்களுக்கு இ ர ண் டா வது அம்மாவாக இருக்க ஒரு புண்ணியவதி மனசொப்பி முன் வந்தாள். வந்தவள் எனக்கு இரண்டாம்' தாரமாகவும் வந்தாள். அவள் ஒரு விதவை !...” என்று விளக்கினார் ஈஸ்வரன். பிறகு, "என் முதல் மனைவியை என் ஏழேழு பிறப்புக்கும் நிறைஞ்ச மனசோடு நினைக்கக் கடமைப்பட்டவன். அவள் நினைவு ஒண்ணிலேதான் நானும் என் எதிர்காலத்தைக் கழிக்க முடிவு கட்டியிருந்தேன். ஆனால், அப்படி நினைச்சுக்கிட்டிருந்தால், என் செல்வங்களோட கதி என்னாகிறது ? - அவங்களுக்கு மனசறிஞ்சு துரோகம் செய்கிறதாக என் மனச்சாட்சி என்னோட முடிவை வச்சு என்ன நடைப் பிணமாக்கிடுச்சு. அப்புறம்தான் என் புத்தி தெளிஞ்சு இம்முடிவுக்குத் துணிஞ்சேன்! ... மனம் வெளுக்க மார்க்கத்தைக் காட்டும்படி பாரதி வேண்டினன் முத்துமாரியிடம்! எனக்கும் மனம் வெளுக்க வழி புலப்பட்டுச்சு !... வந்தவள் புண்ணியவதி. வாஸ்தவமாகவே புண்ணியவதி. குழந்தைகளுக்கு இரண்டாம் அம்மாவாக அமையாமல், முதல் அம்மாவாகவே அமைஞ்சிட்டாள் !... நானும் புண்ணியம் செஞ்சிருக்கிறேன். அதுதான் இவ்வளவுக்காவது எனக்குத் தேறுதல் கிட்டியிருக்கு !...” நிறுத்தினர் பேச்சை. "கலா...!" என்று விளித்தார்.

பூவும் பொட்டுமாக, ஷீபான் பட்டும், பட்டுச் சோளியுமாக வந்து நின்றாள், இருபத்தைந்து இருபத்தாறு வயது கொண்ட கலாவதி. வணங்கினாள்.

சிவஞானம் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

விஜயாவின் சிரிப்புச் சாயல் அப்படியே கலாவதியிடம் இருக்கக் கண்டான் சிவஞானம். அவன் மேனி அல்லாடியது. தெய்வத்தைக் கும்பிடுவது போல் சென்னியில் கரம் பதித்துக்