பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv



நானும் இத்தகைய சோதனையையே நிகழ்த்தியிருக்கிறேன். பாசத்தின் அன்பை - அன்பின் பாசத்தைத் தாய், தந்தை, மகன் என்ற முக்கோணப் பிரிவினுள் சுற்றிய வண்ணம் சோதித்துப் பார்த்தேன். அதன் விளைபலனாக எனக்குக்கிட்டின இருவேறு கற்பனைகள்.

வாழ்க்கையை வாழ்க்கையாகக் காண்பித்த கற்பனைகள் அவை. யதார்த்தமான குணக்குறிகளே என் சிந்தனைகளுக்கு ஊற்றுக்கண்கள் அமைத்திருக்கின்றன.

'கரை மணலும் காகித ஒடமும்' என்ற புதிய மகுடம் சூட்டப்பெற்ற இந்நூலில், தலைப்பு நவீனத்துடன், 'வசந்தம் திரும்பி வரும் !' என்ற அடுத்த நவீனமும் இணைந்துள்ளது. தமிழ்ச்சாதிக் குடும்பத்தை இருவேறு மனநிலைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளேன். 'தங்தை மனம்' இருவேறு அமைப்புக்களிலே சித்திரித்துக் காட்டப்பட்டுள்ளன : தத்துவ அடிப்படை கொண்ட யதார்த்த நிலை-நனவோடைச் சித்திரங்கள் !...

என் கடமையின் நிறைவை, உண்மையான தமிழ் இலக்கியத்தைப் பேணும் இலக்கிய ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களது மதிப்பீட்டில், நான் சுட்டிக்காட்டி ஆய்ந்துள்ள பிரச்சினைகளும் இனம் காட்டும் :

பத்தினிப் பெண் வேண்டும் !' என்ற என் நாவலை 'தமிழ்நாட்டு அரசாங்கப் பரிசு பெற்ற ஆசிரியர்' என்ற குறிப்புடன் வெளிப்படுத்திய புகழ்பெற்ற பழனியப்பா பிரதர்ஸார், இவ்வாண்டு இந்நவீனத் தொகுப்பை வெளியிடுகிறார்கள். தமிழ் வளர்க்கும் தகைமை கொண்ட இப்பதிப்பகத்தாரின் அன்பிற்கும் பாசத்துக்கும் நன்றியறிவுடன் தலை வணங்குகிறேன்.

இருபதாண்டுகளாக என் எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்து என்னை வாழ்த்தி வரும் இலக்கிய ஆர்வலர்களை நான் மறக்கவே முடியாது. அவர்கட்கு இப்பதிப்பகமும் என் எழுத்துக்களைத் தொடர்ந்து பரிசளித்து வருமென்றும் சொல்லி வைக்கின்றேன்.

வணக்கம்.
பூவை எஸ். ஆறுமுகம்