இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55
தெய்வம் மனிதர்கள் உருவில் நடமாடுவது நடப்புச் செயல்தானா ?
ஈஸ்வரன் எழுந்தார். ராஜாவின் கன்னங்களை பையத் தடவிக் கொடுத்து முத்தம் கொடுத்தார். "ராஜாவைக் காப்பாத்திடுங்க. அதுக்கு இன்னொரு அன்புத் தாயைக் கொடுங்க ... இது ரொம்ப முக்கியம்! ... உங்களை நீங்க மறந்திடலாம்; ஆனால், நீங்க உங்க குழந்தையை - உங்க அருமைச் சம்சாரத்தின் நினைவுப் பரிசை மறந்திடாதீங்க!.. அப்பாலே உங்க இஷ்டம்...! நாங்க மதுரைக்குப் புறப்படுகிறோம். முடி இருக்குது !...” என்று சொல்லி விடை பெற்றார் அந்தப் பெரிய மனிதர்!
பேயாட்டம் போட்ட வெறியுடன் சிகரெட்டுப் பெட்டியைத் தாவி எடுத்தான் சிவஞானம்.