பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

அறிவுறுத்திய ராமையாவின் பேச்சும் அவனுள் சுழித்தது. திரும்பத் திரும்ப மல்லிகாவின் இறுதி வேண்டுகோள் அவன் மூளையில் மோதியது.!...

சிலையாக மலைத்து நின்றான் , தன்னை மறந்து வெறும் சிலையாக மலைத்து நின்றான் சிவஞானம் - மீண்டும் குழந்தையை வெறிக்கப் பார்த்தான். அவனுள் அவனது அலுவலகக் கடமைகள் பூதாகாரமாகத் தோன்றின ஆயாவைக் கொண்டு என் ராஜாவை - என் மல்லிகாவின் ராஜாவை வளர்த்துப்பிடலாம்னு கோட்டை கட்டிக்கிட்டிருந்தேன். கடைசியிலே, அந்த ஆசையிலேயும் கோட்டை மண் விழுந்திடுச்சே!... ஆபீஸ் உத்தியோகத்துக்கு நான் முதலிலே வழி சொல்லியாகணும். அத்தோடு, குழந்தையை நான் ஒண்டியாக எப்படி வளர்ப்பேன் ? ... மல்லியின் பெரியம்மா காலமாகாது இருந்திருந்தால், எவ்வளவோ சிலாக்கியமாக இருந்திருக்குமே! ... விளையாட்டுப் போல ஒரு நாள் மல்லிகா அவனுக்குப் பால் சீசாவைப் புகட்டவும் மருந்து கொடுக்கவும் பழகிக் கொடுத்தாள். தன் முடிவினை அவன் முன் கூட்டியே முடிவிட்டுக்கொண்டுதான் அவள் அவனுக்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தாளோ, என்னவோ ?

அவன் கண்களை இறுக மூடிக்கொண்டு சற்று நேரம் அப்படியே நின்றான்.

வானம் மின்னி முழங்கியது.

அவனது இதயவானத்தைப் பிரதிபலித்ததா இயற்கை ?

புதிய சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான் சிவஞானம். புதிய மனத்தில் புதிய முடிவு உருக்கொண்ட பாவனை அவனுள் முகிழ்த்திருந்தது. கோடை மழை பெய்ததும், புதிய வானத்தையும் புதிய 'பூமியையும் தரிசித்தன அவன் நேத்திரங்கள். தன் கேத்திரமான குழந்தையைப் பார்த்தான். மெல்ல அசைந்து புரண்டது குழவி.

பூரண நிலவை நோக்கினான் அவன். 'இந்த முழு நிலவு இன்னும் சில நாள் போனதும் தேய்ந்துவிடுமே ! ..'.-- இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்ற உண்மை. அனுபவ பூர்வமாக அவனுள் புலனாயிற்றுப் போலும்! புலன் காட்டியது போலும்! ...