பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அப்பொழுது ஆயிரத்தெட்டாவது தடவையாகச் சிவஞானத்தின் நெஞ்சத்திலே எதிரொலி கிளப்பித் தீர்த்தது.

சிவாஞானம் விழி நீரைத் துடைத்துவிடவில்லை. 'மல்லி, அன்னைக்கு நீ என்கிட்டே கையடிச்சு வாங்கறதுக்குள்ளே காலன் உன்னைப் பறிச்சிட்டுப் போயிட்டான் என்கிட்டேயிருந்து!.... என்னப் புரிஞ்ச புண்ணியவதி நீ ! என் மனசு உனக்குத் தெரியும். நம்ம ராஜாவுக்குக் கட்டாயமாக சீக்கிரமாக ஒரு இரண்டாவது அம்மாவைக் கொடுத்துப்பிடுறேன்! ... உன் பேரிலே ஆணை இது !...” என்று வாய் விட்டுப் புலம்பினான் அவன். மல்லிகா எவ்வளவு நிம்மதியாகச் சிரிக்கிறாள் !....

யார் யாரோ மாடியில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். -

ரேடியோவில் நடந்துகொண்டிருந்த இசைத்தட்டு நிகழ்ச்சி அவன் சித்தத்தை விழிக்கச் செய்தது.

மணி எட்டு, ஐந்து !

ஜனதாவுக்குப் புறப்பட வேண்டும் அவன்! --அவனும் அவன் குழந்தையும் !

செய்தித்தாள் அவன் நோக்கை நோக்கியது. -- கோயமுத்தூர், மே, 27, பொதுப்பணித்துறை அமைச்சர் உறுதி "படி அரிசி ! - முன் வைத்த காலைப் பின் வைக்க, மாட்டோம் !...”

ராதா வழக்குக்கு மனக்கோழி தாவியது.

முகட்டை அண்ணாந்து சிவஞானம் பார்த்தான்.

தாய்ப்பறவையைக் காணாமல் ஏங்கியவாறு கிறீச்சிட்டது. குஞ்சு.

அடுத்த கணத்தில், தாய்ப்பறவை பறந்து வந்ததும், குஞ்சு மட்டற்ற மகிழ்வுடன் சிறகுகளை அடித்துக்கொண்டது.

செல்வ மகனைப் பார்த்தான் சிவஞானம்.

கைகளை ஆட்டியும் விரல்களை அழகு பார்த்தும் கண் விழித்துக் கிடந்தான் ராஜா. அக்குழந்தையின் முகத்தில் மூடு பனி போன்று ஒரு சோகம் இழையோடியிருப்பதாக அப்போது அவனது தந்தை மனம் ஊகம் செய்தது. "ராஜா,