63
இனி நீ தாயில்லாப்பிள்ளை இல்லையடா, என் கண்ணே, என் தெய்வமே!"’ என்று மகிழ்வின் துடிப்புடன் தன்னுள் சொல்லிக் கொண்டான். -
வீதி வளைவில் 'சித்தி' விளம்பர வண்டி சென்றது !
அப்போது ராமையா அங்கு வந்தான்.
அவனை எதிர்பார்த்த துப்பு அவனுக்கு மானசீகமாக அஞ்சல் செய்யப்பட்டிருக்கக் கூடும்.
"அண்ணாச்சி, என்னோட புதுப் பெண்சாதியை டாக்டரம்மா கிட்டே கொண்டாந்து காண்பிச்சிட்டு இப்பத்தான் வங்தேன்! அது தாயாகப் போகுதாம்! ... என்னோட பையன் அதன் சின்னம்மாவைக் கொஞ்ச நேரம் காணாமல் அலறித் தீர்த்திட்டிருக்கான்!... அவன் அம்மா செத்த கெடுவிலே எலும்பாய் இருந்தான்! இப்போ அவன் சின்னம்மா வந்ததும், தெளிஞ்சிட்டான் இதெல்லாம் கடவுள் விளையாட்டுங்க போலே !.... அதனாலேதான் வாழ்க்கையையே ஒரு விளையாட்டுன்னு: எழுதுருங்க போலிருக்குதுங்க ... உங்க கிட்டே ரெம்பப் பேசணும்! இருங்க, ஏதாச்சும் சவாரி சிக்குதான்னு ஒரு ரவுண்ட் சுத்திட்டு ஒரு கால் மணியிலே வந்திடுறேன். நான் வந்து உங்களையும் ராஜாவையும் அழைச்சிட்டுப் போய் ரயில் ஏற்றிவிடுறேனுங்க !...” என்று சொல்லி, ராஜாவை நெருங்கிப் பார்த்தான் ராமையா. பிறகு, அண்ணாச்சி, உங்க ராஜாவுக்கு ஒரு அன்பு முத்தம் கொடுக்கவேணும்னு அப்பவிலேயிருந்து துடிச்சுக்கிட்டிருக்கேன். உத்தரவு கிடைக்குங்களா ?’ என்று பரிதாபமாகக் கேட்டான் ரிக்க்ஷாவாலா.
அவன் அன்பைக் கேட்டதும் சிவஞானத்தின் மனம் நெகிழ்ந்து உருகியது. .
"ராமையா! நீ என் தம்பி. இதுக்குக்கூட என்னைக் கேட்கணுமா ?’ என்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்தான்.
ராமையாவின் முத்தம் ராஜாவை 'கடகட'வென்று சிரிக்க வைத்தது.
அவன் ஒடிவிட்டான் !