பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கரை மணலும் காகித ஓடமும்!

1

தஞ்சை மண்

சோழர்களின் வரலாற்றுப் புகழுக்கு வாய்த்ததொரு கலைக் கலங்கரையாக விளங்கிக்கொண்டிருந்தது பெரிய கோயில்.

நிழல் படியாத கோபுரம் கொண்ட அக்கோயிலின் நிழலில் அமைந்திருந்தது என்னும் ஒரு மயக்கத்தைப் படியச் செய்யும் வகையில் நின்றது. அந்த மாளிகை, தென்புறத்தில் நழுவி ஓடிக்கொண்டிருந்த காவிரியின் புதுப்புனல் கோலத்துக்குப் பிரதியட்ச சாட்சியங்களாக அந்தப் பெருக்கோயிலும் அந்தச் சிறு மாளிகையும் பொலிந்து கொண்டிருந்தன போலும்! ...

மாளிகை, தன்மானம் மிக்கவனின் சத்திய மனத்தைப் போன்று கம்பீரமான நளினம் பூத்து தின்றது. வெண்ணிலவு அள்ளித் தெளிக்கப்பட்டாற் போன்று வெண்மை நிறம் பளிச்சென்று துலங்கள் காட்சியளித்த அக்கட்டடத்தின் இம்டைப்டன் கோலமே, அம்மாள் கைக்கு வாய்த்திட்டதொரு புனிதச் சின்னம் போலவும் தோன்றியது.

அத்தோற்றத்தில் மனம் தோய்ந்து, லயித்துப் பின்னிக் கிடந்த நிலையிலே, எதேதோ பழைய நினைவுகளின் தவிர்க்க முடியாத சுமை அழுத்தத்தின் சூழலிலே, மாளிகையின் நுழைவாயிலில் நின்ற சைக்கிள் ரிக்ஷாவை விட்டுக் கீழே இறங்கினான்.