65
வயிற்றில் போய்ச் சேர வேண்டுமே என்பதுதான். மிகவும் ஜாக்கிரதையாகப் பாலடையைப் பற்றியபடி, மருந்தைச் செலுத்த முயன்றான். திடீரென்று அவனுக்கு இருமல் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். குழந்தை 'களகள’ வென்று மருந்தை உள்ளே இறக்காமல் இருமத் தொடங்கியது. ஒளி வெள்ளத்தில் நன்கு தெரிந்த பாலடையிலேயே அவன் கவனம் பூராவும் நிலைத்திருந்தது.
ஆனால், மறுகணம் குழந்தை பலமானதொரு அலறல் சத்தத்தைக் கிளப்பியது, கைகால்களை உதறியபடி, மருந்து நாசிக்கு ஏறிவிட்டது. அடுத்த வினாடி, பாலடை தரையில் நழுவியது.
பதட்டத்துடன் குழந்தையைப் பார்த்தான் சிவஞானம்.
குழந்தை, பேச்சு மூச்சில்லாமல் கட்டை போலக் காணப் பட்டது.
உடல் ரத்தம் முழுதும் மண்டையுச்சிக்குத் தாவ, "ஐயோ ! மல்லிகா ... ஐயோ ராஜா !” என்று கூக்குரல் எழுப்பினான் சிவஞானம். குழந்தை ராஜாவை மடியில் கிடத்திக்கொண்டு அலறினான். கண்ணீர் மாலை நீண்டது.
கூடி வந்த கும்பலைப் பிளந்துகொண்டு, அண்ணாச்சி !’ என்று ஒடோடி வந்தான் ரிக்க்ஷாக்காரன் ராமையா.
"தம்பி, நான் என் குழந்தையைச் சாகடிச்சிட்டேனா? : ஐயையோ, தெய்வமே !. நான் என்ன பாவம் செய்தேனோ ... ஐயோ, ராஜா! ... உன் அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ?" எப்படிப் பதில் சொல்லுவேன் ?’ என்று கூக்குரலிட்டான்.
ராஜா இன்னமும் பிணம் போலவே காட்சியளித்தான் !..
அப்போது :
"அத்தான்!" என்று அழைத்தவாறு விஜயா வந்து நின்றாள். குழந்தை இருந்த நிலையைப் பார்த்ததும், அதற்குத் 'தட்டேறி' விட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். குழந்தையைச் சிவஞானத்தின் மடியிலிருந்து வாங்கிக்கொண்டு தரையில் அமர்ந்து தன் மடியில் கிடத்தினாள் தொண்டைக்
க,ம-5