பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

குழியிலும் நெஞ்சிலும் முதுகுத் தண்டிலும் தடவிக் கொடுத்தாள். பிறகு, அதன் நாசித் துவாரங்களில் உதடுகளைப் பொருத்தி உறிஞ்சினாள் : துப்பினாள்!

சிவஞானம் தலையில் அடித்துக்கொண்டு தரையில் புரண்டான். கையெடுத்துச் சூ ன் ய த் தி ல் நின்றபடி கும்பிட்டான். "ஆண்டவனே, என் குழந்தையைக் காப்பாற்று !... மல்லிகா ! உன் குழந்தையைக் காப்பாற்றிக் கொடுக்க மாட்டாயா ?' என்று ஒலம் பரப்பினான். பிறகு, விஜயாவின் பக்கம் திரும்பி, "விஜயா, தெய்வம்தான் உன்னை எதிர்பாராமல் கொண்டுவந்து சேர்த்திருக்குது. என் ராஜா பிழைச்சிடுவானா ? டாக்டரை வரவழைக்கட்டுமா ?" என்று நடுங்கிய வண்ணம் கேட்டான்.

"அத்தான் பதறாதீங்க. தெய்வம் உங்க ராஜாவைச் சோதிச்சிட மாட்டாது !.... கொஞ்சம் தண்ணி கொடுங்க!" சட்டை தெப்பமாக நனைந்திருந்தது; கழற்றி வீசினாள்.

விஜயா தண்ணீரை ராஜாவின் முகத்தில் தெளித்தாள். 'விக்ஸ் வேபோரப்' டப்பா இருந்தது. அதில் கொஞ்சம் எடுத்து குழந்தையின் நாசித் துவாரங்களில் தடவினாள். வாடை படர்ந்தது.

கூர்த்த மதி பதித்துக் குழந்தையையே ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் விஜயா. முத்துக்கள் உருண்டன. உருட்டி விட்டாள். அவளது அந்தம் செறிந்த இதழ்கள் சன்னம் சன்னமாக மலரத் தொடங்கின! "அத்தான் !...” என்று அழைத்தாள்!

அவள் காலடியில் அ ந் த க் க்ரூப் போட்டோ' பிரிந்திருந்தது.

விஜயாவின் மங்கல நாண் எத்துணை அழகுடன் பொலிந்து கொண்டிருக்கிறது!...

ஆஹா, !