பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ராமையா டாக்டருடன் வந்தான்.

"ராமையா, உன் அன்புக்கு நன்றி. நம்ம ராஜா மறு பிறப்பு எடுத்திட்டான். டாக்டர் ஐயாவைக் கொண்டுபோய் விட்டிட்டு வந்திடு", என்று சொல்லி, ஐந்து ரூபாய்த்தாளைக் கொடுத்தான் சிவஞானம்.

டாக்டரை அனுப்பிவிட்டு, ராமையா மீண்டதும், சிவஞானத்தின் வேஷ்டி பூராவும் மலம் நிரம்பியிருந்ததை நினைவூட்டவே, சிவஞானம் வெளிப்புறம் சென்று, வேறு வேஷ்டி மாற்றிக்கொண்டு திரும்பினான்.

"அத்தான், மல்லிகா எங்கே? " என்று விசாரித்தாள். விஜயா.

சிவஞானம் குனிந்த தலையை நிமிர்த்தாமல், "அவள் செத்துப் போயிட்டா, விஜயா !” என்று உணர்ச்சிப் பெருக்குடன் உடல் துடிக்கத் தெரிவித்தான்.

ஐயோ !” என்று அலறினாள் விஜயா.

அப்போதுதான் சிவஞானம் தலையை உயர்த்தி விஜயாவைப் பார்த்தான். குரல் நடுங்க, "விஜயா !” என்று வீரிட்டான்.

பூவிழந்து, பொட்டிழந்து, வெண்ணிற ஆடை திகழக் காணப்பட்டாள் விஜயா. "அத்தான், எனக்குப் பகவான் அளித்த முடிவு இதுதான் அத்தான்!.." என்று விம்மினாள் விஜயா. "என் கணவரைக் காலரா நோய் கொண்டு போயிட்டுதுங்க அத்தான் !...” என்று விம்மலைத் தொடர் சேர்த்தாள். -

சிரிப்புக்கென்றுதான் வாழ்க்கை அமைந்தது என்று சொன்ன விஜயா விம்மி அழுதாள் !... .

வேடிக்கையான வாழ்வு !...

அட கடவுளே! " என்று தலையில் கைை உட்கார்ந்தபடி தேம்பிச் செருமினான் சிவஞானம்.

....ங்.கா " என்றது குழந்தை. பேபி ராஜாவுக்குப் பேசத் தெரியுமே!

விஜயா தன் நிலையை மறந்துவிட்டு, குழந்தையை நினைத்தாள். பாலூட்டும் சீசாவைப் பற்றியெடுத்தாள்.

ய வைத்து