பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


“டீ, ரெடி!”

‘செந்தில் விலாசம்’ என்ற எழுத்துக்கள் துலாம்பரமாக மின்னின.

ஞானபண்டிதன் காரிலிருத்து இறங்கினதும், பங்களாவின் அவ்வெழுத்துக்களைத்தான் முதலில் பார்த்தான்.

சோமசேகர் முதலில் செல்ல, அவரைத் தொடர்ந்து ஞானபண்டிதன் செல்ல, அவனைப் பின்பற்றித் தொடர வேண்டியவள் ஆனாள் வாஷிங்க்டனின் அழகுக் கன்னி ஸ்டெல்லா.

“இதுதான் நம் பங்களா !” என்றார் பெரியவர்.

“இதுதான் எங்களது புதிய பங்களா !” என்றான் ஞானபண்டிதன், ஸ்டெல்லா ஜான்ஸனிடம்.

வாஷ்ங்கடனை அடைந்த மூன்றாம் மாதத்தில் - அதாவது, கிறிஸ்துமஸ் விழா கழிந்த மூன்றாவது நாளில்-சோமசேகரிடமிருந்து வந்திருந்த கடிதத்தில், தாம் புது பங்களா கட்டி அங்கு குடி வந்துவிட்ட விவரத்தைக் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

தோட்டம், பங்களா, லான், ஓய்வு மனை என்று பிரிந்திருந்த பகுதிகளைச் சுற்றிக் காட்டினர் நிர்வாகி.

ஞானபண்டிதனுக்குப் பங்களா ரொம்பவும் பிடித்து விட்டது. அவனது இனிய நற்கனாக்களை எதிர்காலச் சங்கிலியுடன் பிணைத்து வளர்த்திவிட உதவுவதாகவே அப்பெருமனை அவனுக்குத் தோன்றியது. அவ்வுணர்வு அவனுள் புதிய தெம்பை ஊட்டவும் செய்தது.

பங்களா மிகவும் நூதனமான கவர்ச்சியுடன் பொலிவதாகப் பாராட்டுத் தெரிவித்தாள் ஸ்டெல்லா.

நன்றி நவின்றான் அவன்.