பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


அந்தி வந்தது

ண்டையார்ப்பேட்டையில் சேணி அம்மன் கோயில் பகுதியின் சார்பில்தான் சோமசேகரின் கண்ணாடித் தொழிற் சாலை இருந்தது.

ஐந்து வருஷங்களுக்கு முன்னம் சாதாரணமான தொழில் சாலையாக ஆரம்பமான அது இப்போது எவ்வளவு வளர்ந்து விட்டது! -எங்கும் சுற்றிப் பார்த்த ஞானபண்டிதனுக்கு வியப்பு விரிந்தது. ஆனாலும், மேலே நாடுகளின் தொழிற் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கக்கூட அவனுக்கு மனமில்லை. அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்தபோதோ அவனுக்கு ஏமாற்றமும் மனக்குறைவுமே மிஞ்சலாயின. நம் பாரத நாட்டிலும்கூட இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் எல்லாம் பூர்த்தி பெற்று விட்டால், தொழில் வளம் ஒரளவுக்குச் செழித்துத் தழைத்து விட ஏது உண்டு என்பதாகவே அவன் கருத முற்பட்டான்.

அவனது அயல் நாட்டுப் பயணம் அவனாள் உருவாக்கியிருந்த புது டயர்கள் உற்பத்தித் தொழிலுக்கான கட்டடம் நிர்ணயமானது. கிண்டியில்தான் தொழில் ஆரம்பமாகப் போகிறது. அரசாங்க உதவியும் கிடைக்கும்.

ஞானபண்டிதன் எப்போதுமே சுறுசுறுப்பு மிக்கவன்.

அதிலும் இளரத்தம்.

பின் கேட்பானேன்!

நல்ல உள்ளம்.

நல்ல குறிக்கோள்களே ஊட்டி வளர்த்தன.

ஒரு மணி நேரத்தில் புதுத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளை பூர்வாங்க முறையில் தொடங்கிவிட்டான் அவன்.

சோமசேகருக்கு அவன் துடிப்பு மிகவும் பிடித்துவிட்டது.

அந்தி வந்தது.

அழகும் வந்தது.

அங்கிருந்து ஞானபண்டிதன் புறப்பட்டான்.