பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

“அங்கே வேலை !”

“செட்டிய வீடு ஒன்றிலே சமையல் வேலைங்க !”

“ஒஹோ, அப்படியா ? சரி, இப்போது எங்க கண்ணாடித் தொழிற்சாலையிலே உங்களுக்கு என்ன வேலை தெரியும் ?”

“இப்போதைக்கு அது சம்பந்தப்பட்ட வேலை தெரிய மாட்டாதுங்க. ஆனா நாலைஞ்சு தினத்திலே கற்றுக்கிடுவேணுங்க!”

“ஒஹோ!” என்று சிரித்தான் ஞானபண்டிதன். பிறகு, நல்ல மனத்துடன் தன் தந்தையை நோக்கினான். மகனின் முகபாவனை நல்ல பதில் காட்டவே, பெரியவர் சொன்னார் : “நாளைக்கு எங்க பாக்டரிக்கு காலையிலே பதினொரு மணிக்கு சரியாக வந்திடுங்க. பார்த்து ஏதாவது வேலை போட்டுத் தரலாம் !”

அகதியாக வந்த தமிழ்மகன், தமிழ்மண்ணுக்கே உரித்தான நன்றியறிவு துலங்கி மின்னலிட, கை கூப்பிப் பிரிந்தான்.

“பெரியவர் எழுந்தார். ஞானபண்டிதனைச் சாப்பாட்டுக்கு அழைத்தார். அவனுக்காகவே சாப்பிடாமல் இருப்பதாகவும் சொன்னார்

அப்பேச்சு அவனுக்குத் திகிலை வளர்த்தது. தான் நண்பன் வீட்டில் சாப்பிடப் போவது குறித்து முன்கூட்டியே டெலிபோன் மூலம் தெரிவித்திருக்கலாமே என்று இப்போது வருந்தினான். தந்தையுடன் சாப்பிட மீண்டும் சாப்பிட எழுந்தான்.

வேலப்பன் பறிமாறினான்.

பெரியவர் அனுபவித்துச் சாப்பிட்டார்.

ஞானபண்டிதனோ மென்று விழுங்கிக்கொண்டிருந்தான்.

“என்ன தம்பி, வயிறு மப்புப் போட்டிருக்குதா ?” என்று என்று கேட்டார் சோமசேகர். !

கடைசியில், பொய் சொல்லக்கூடாது என்ற விரதம் கொண்ட ஞானபண்டிதன் உண்மையைச் செப்பினான்.

தன் பேரில் ஞானபண்டிதன் வைத்திருக்கும் உயர்ந்த மதிப்பை எண்ணி இறும்பூதெய்தினார் அவர்.