பக்கம்:கற்சுவர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கற்சுவர்கள்

கொண்டும் சினிமாத் தயாரிப்பில் இறங்கினார் மகாராஜா. அதற்காகப் பீமா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சென்னையில் ஒரு சினிமாக் கம்பெனியும் திறக்கப்பட்டது. - சினிமாக் கம்பெனி திறக்கப்பட்டதையொட்டிச் சில நடிகைகளோடு அவருக்கு அதிகத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களில் சில அழகான இளம் நடிகைகள் வீக் என்ட்” எண்டர்டெயின்மெண்டுக்காகப் பீமநாதபுரம் அரண் மனைக்கே பெரிய பெரிய சவர்லே இம்பாலா கார்களில் தேடி வரத் தொடங்கினார்கள். ஜெயநளினி என்ற ஒரு புதிய கதாநாயகிக்கு லட்ச ரூபாய் செலவழித்து அ.ை யாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்தார் மகாராஜா இந்த மாதிரிப் போக்கில் அதிருப்தியும் கசப்பும் அடைந்த பின்பே தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசிய நாட்டில் ஈப்போவில் வியாபாரமும், பக்கத்தில் ரப்பர் எஸ்டேட்டு களும் இருக்கவே-அவரோடு மலேசியா புறப்பட்டுவிட்டான். மகாராஜாவின் மூத்த மகனும் இளையராஜாப் பட்டம் பெறவேண்டியவனுமான தனசேகர பாண்டிய பூபதி என்ற முழுப் பெயரையுடைய தனசேகரன். -

சமஸ்தானத்துக்கு "ப்ரீவிபர்ஸ் என்னும் ராஜமான்யத். தொகை வருவது நிற்கிறவரை பெரிய மகாராஜா, கூத்து குடி, ரேஸ், சினிமாத் தயாரிப்பு என்ற பெயரில் நடிகை. களோடு லீலை எல்லாவற்றையும் தாராளமாக நடத்த முடிந்தது. - . . . . . .

. ராஜமான்யம் நினறதுமே அவரது இதயமும் நின்று. போய் விட்டது. விவரம் தெரியரத காரணத்தால் சினிமாத். தயாரிப்பில் அவரை நிறைய ஏமாற்றிவிட்டார்கள். அவரது

படங்கள் வெற்றியோ வசூலோ ஆகவில்லை.அவ்வளவேன்? சில படங்கள் தயாராகவே இல்லை. பணத்தை மட்டும் லட்ச லட்சமாக முழுங்கின. நிறைய நஷ்டப்பட்டும் நடிகைகள் மேலுள்ள நைப்பாசையால் அவர் சாகிறவரை

சினிமாவை விடவில்லை. சினிமாக் கவர்ச்சிகளும் சாகடிக்

காமல் அவரை விட்டு விலகிப் போய்விடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/10&oldid=552983" இலிருந்து மீள்விக்கப்பட்டது