பக்கம்:கற்சுவர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹盘别 கற்சுவர்கள்

போலிருந்தது. தனசேகரனுக்கு, காலையில் மாமா தங்க பாண்டியன் தூக்கத்திலிருந்து விழித்ததும் முதல் வேலை யாக அவரிடமும் அந்தச் சிறு கதையைக் கோடுத்துப் படிக்கச் சொல்லிவிடவேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு விட்டிருந்தான் அவன். கதையை எழுதி யிருக்கும் ஆசிரியன் தங்கள் சமஸ்தான எல்லைக்குள் நன்கு பழகிக் கவனித்த யாரோ ஒர் ஆள்தான் என்பதில் இப்போது அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்க வில்லை. .

8

ஒர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது என்ற கதையை எழுதியவரைப் பற்றித் தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தோடு மேற்பகுதிகளைப் படிக்கலானான் தன சேகரன். தன்னையும் தன்னைச் சுற்றியும் பீமநாதபுரம் அரண்மனையில் இருப்பவர்களை அப்படியே படம் பிடித்தாற்போல இருந்த்து அந்தச் சிறுகதை. .

பூபதி இருக்கிறவரை சீமநாதபுரம் அரண்மனையின் புகழ்பெற்ற புராதனமான ஒவியங்கள். பஞ்சலோகச் சிலை கள் எதையுமே மலிவான விலைக்கு வாங்கி அந்நிய நாடு களுக்கு அனுப்பிப் பணம்பண்ண. முடியாதென்று எண்ணி, "ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ உரிமையாளர் சாமி நாதன் அலற்றை அடையத் தந்திரமாக வேறு குறுக்கு வழி முயற்சிகளில் இறங்கினார். - .

சாமிநாதன் பக்கா வியாபாரி. அவரிடம் ஏஜெண்டு களாகத் தமிழ்நாடு முழுவதும் ஒடியாடித் திருடிக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய நாகரிகமான சிலத் திருடர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அவருடைய கையாட்களாக எல்லா இடங்களிலும் செயல்பட்டார்கள். சீமநாதபுரம் பெரிய ராஜாவோ பலவீனங்களும் பணக் கஷ்டங்களும் நிறைந்த வராக இருந்தார். எனவே ஏன்ஷியண்ட் ஆர்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/104&oldid=553076" இலிருந்து மீள்விக்கப்பட்டது