பக்கம்:கற்சுவர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I G4 கற்சுவர்கள்

திருந்தார். அது ஒரு காசும் லாபம் தராமல் பணத்தைக் கடனீகரம் செய்து கொண்டிருந்தது. ஒரு படமும் தயாரித்து ரிலிசாகாமல், நாளுக்கு நாள் அந்தக் கம்பெனி நஷ்டத்தைத் தேடித் தந்து கொண்டிருந்தது. சினிமாக் கம்பெனி' தொடங்கியதனால் பெரிய ராஜாவுக்குச் சில அழகிய நடிகைகளின் சகவாசமும் பழக்கமும் சுகமும் கிடைத்தது. தான் மிச்சமே ஒழிய உருப்படியாக வேறெதுவும் நடக்க வில்லை.

அவரோ வாங்கியிருந்த எல்லாக் கடன்களையும் அரண் மனை மேல்தான் வாங்கியிருந்தார். அரண்மனையிலுள்ள சிலைகள், ஓவியங்கள், மியூவியம், லைப்ரரி எல்லாவற்றை யும் சுருட்டி விடலாம் என்ற திட்டத்தோடுதான்சாமிநாதன் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

இந்த விஷயம் மகன் பூபதிக்குத் தெரிய வந்த சமயத். தில் நிலைமை கட்டு மீறிப்போய் அரண்மனை ஜப்திக்கு வந்து விட்டது. பத்திரிகைகளில் ஏல நோட்டிஸ் கூடப் பிரசுரமாகி விட்டது. அரண்மனை மதிற்கவர்களிலும் நான்கு புறத்துக் கோட்டைக் கதவுகளிலும் ஏல. நோட்டிசை எல்லாரும் காணும்படி அச்சிட்டு ஒட்டியிருந்: தார்கள். - x

ஊரெல்லாம் இதைப்பற்றியே பேச்சாகி இருந்தது. பூபதிக்கு ஒரே கோபம், தன் கோபத்தை யார் மேல் காட்டுவதென்றே அவனுக்குப் புரியவில்லை.

பணம் கட்டி ஏலத்தைத் தடுப்பதென்றாலும் ஒரே

நாளில் பத்துப் பன்னிரண்டு லட்ச ரூபாயை எப்படித். திரட்டுவதென்று மலைப்பாக இருந்தது. தந்தையோ ஊரில் இல்லை. சென்னையில் குடிபோதையோடு ஏதாவது: ஒரு சினிமா நடிகையின் மடியில் அவர் புரண்டு கொண்டி

ருக்கக்கூடும். அவர் ஓடி வந்து இந்த ஏலத்தைத் தடுப்பார் என்று எதிர்பார்ப்பது பயனற்றது. என்ன செய்வது எப்படி இதைத் தடுக்கலாம் என்று பூபதி யோசிப்பதற்குள் காரியம் கை மீறிப் போய்விட்டது. . ',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/106&oldid=553078" இலிருந்து மீள்விக்கப்பட்டது