பக்கம்:கற்சுவர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி # 0.5

அரண்மனை வாசலில் பொருள்களும் கட்டிடமும் ஏலத்துக்கு வந்தபோது சாமிநாதன் தன்னுடைய கையாட் களையே பணத்துடன் நிறுத்திவைத்திருந்து லைப்ரரி ஒவியங்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் கூடியவரை மலிவான விலைக்கு ஏலத்தில் எடுத்துவிட்டார். அரண் மனையும் அதைச் சுற்றி இருந்த காலி இடங்களும்கூட ஏலத்துக்குப் போய் விற்று விட்டன. பூபதிக்கு ஏற்பட்ட மன வேதனை சொல்வி முடியாது. அரண்மனை வாசலில் ஏலத்தை வேடிக்கை பார்க்க ஊர் ஜனங்களின் பெருங் கூட்டம் கூடிவிட்டது. சிலர் அனுதாபப்பட்டார்கள். வேறுசிலர், "இந்த அரண்மனை வாசிகளுக்கு நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று ஆத்திரத்தோடு கருவிக் கொண்டு போனார்கள்.

வேறு சிலர் தங்கள் ஊரின் பரம்பரையான பெருமை களை யாரோ பட்டினத்து வியாபாரி வந்து ஏலம் எடுப் பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குமுறி மனம் வருந்தினார்கள். அப்படி மனம் வருந்திய உள்ளூர்ப் .பிரமுகர் ஒருவர் ஓர் ஒரமாக அரண்மனை வாசலில் ஒதுங்கி நின்ற பூபதியின் அருகே வந்து அனுதாபம் நிறைந்த குரவில் ரொம்ப வருத்தப்படறேன் இளையராஜா! உங்கள் தந்தையார் பெரியராஜா இப்படி எல்லாம் கடன் வாராப் :பில பண்ணியிருக்க வேண்டாம். எல்லாம் காலக் கோளாறு, உங்க பொறுப்பிலே இருந்தாலாவது நீங்க இதெல்லாம் ஆகாமல் ஜாக்கிரதையா இருந்திருப்பிங்க..." என்றார்.

"நீங்க வருத்தப்படற மாதிரி இந்த ஏலம் நடக்கிறதுக் காக நான் வருத்தப்படலே. இதுக்கப்புறமாவது எங்கப் பாவுக்குப் புத்தி வந்து அவருடைய ஆஷாட பூதித்தனங்கள் தெளிந்தால் பரவாயில்லை. இந்த உயரமான கல் மதிந் சுவர்களுக்கு வெளியே தெருவில் துரக்கியெறியப்பட்ட பிறகாவது இனிமேல் இங்குள்ளவர்களுக்கு அசல் வாழ்க்கை எத்தகையது என்பது புரியவேண்டும். இந்த அரண்மன்ை ஆரலம் போவதில் எனக்கு மனக் கஷ்டமே இல்லை. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/107&oldid=553079" இலிருந்து மீள்விக்கப்பட்டது