பக்கம்:கற்சுவர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 06 கற்சுவர்க ள்

போகும்போதாவது எங்கள் குடும்பத்தைப் பிடித்த பீடை களான சோம்புல், வறட்டுக் கவுரவம், டம்பம் எல்லாம்: தொலைந்தால் சரிதான். இன்று நான் வருந்துவது எல்லாம் இங்கேயிருந்த அறிவு நூல்கள், சிற்பங்கள், ஒவியங்கள். அருங்கலைப் பொருட்கள் எல்லாம் அந்நிய நாடுகளுக்குசி சோரம் போகின்றனவே என்பதற்காகத்தான். அவை: அவ்வாறு இங்கிருந்து வெளியேற்றப்படுவது எனக்கும். உங்களுக்கும் இவ்வூர் மக்களுக்கும் மிகப் பெரிய அவமானம். அந்தப் பொருட்களை ஏலத்துக்கு விடாமல் இங்குள்ள மற்றப் பண்டங்களை மட்டும் ஏலத்துக்கு விட்டே அவர்கள் என் தந்தைக்குக் கொடுத்த கடனை அடைத்துக்கொள்ள முடியும். ஆனால் கடன் கொடுத்தவர்களின் பேராசை காரணமாக இங்கு எல்லாமே ஏலத்துக்கு விடப்பட்டிருக் கின்றன. நமது கலைப்பொருட்களும் நூல்களும் சிலை களும் சிற்பங்களும் அந்நிய நாடுகளுக்குப் போவதை மறியல் செப்தாவது தடுத்தாக வேண்டும். அரசாங்கமே இவற்றை மீட்டு இவ்வூரில் ஒரு மியூவியமும் லைப்ரரியும் கட்டி அதைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஊர்வலமாகச் சென்று மனுக்கொடுப்போம். அதுவரை சாமிநாதன் இதில் ஒரு சிறுதுரும்புகூட எடுத்துச் செல்ல முடியாமல் ஊர்மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். வெகுஜன அபிப்பிராயத் தையோ ஊர் மக்களின் ஏகோபித்த விருப்பத்தையோ கலெக்டர் புறக்கணித்து விடமுடியாது. எப்படியும். இந்தக் காரியத்தை நாம் சாதித்தே ஆக வேண்டும்.'

நிதானமாகவும் திட்டமிட்டும் இந்த வார்த்தைகளைசி சொன்னான் பூபதி. அவனிடம் வருத்தப் பட்டுக்கொண் டிருந்த பெரியவரும் இந்த யோசனையை ஒப்புக்கொண்டு: வரவேற்றார். வேறு சிலரும் அந்தச் சூழ்நிலையில் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்கள் அப்படிச் செய்: வதை வரவேற்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/108&oldid=553080" இலிருந்து மீள்விக்கப்பட்டது