பக்கம்:கற்சுவர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9

சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு ராஜமான்யம் வரத் தொடங்கியதும், இந்திய மகா ராஜாக்களில் பலர் ரேஸ் குதிரைகள் வளர்ப்பது, சினிமா எடுப்பது, ஆடம்பர ஹோட்டல்கள் நடத்துவது, காபி எஸ்டேட், டி. எஸ்டேட் டெக்ஸ்டைல் மில் எனப் பல விதமான தொழில்களில் இறங்கினர். அவர்களில் பலர் கடந்த கால டாம்பீக உணர்வுகளை விட முடியாமல் சிரமப்பட்டனர். பழைய பழகிய ஆடம்பரங்களுக்கும், புதிய நிர்பந்தமான பணப் பற்றாக் குறைக்கும் ஒரு போர்ாட்டமே அப்படிப்பட்டவர் கள் வாழ்வில் ஆரம்பமாகியிருந்தது. அந்தப் போராட்டத் தில் தோற்றுப் போய்த் தான் மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதி மாண்டு போயிருந்தார். -

பீமநாதபுரம் சமஸ்தானமாக இருந்தவரை திவான் தனி இராணுவம், தனிப் போலீஸ், தனிக்கொடி, தனி ராஜ மரியாதைகன் எல்லாம் இருந்தன. கஜானாவில் தங்கமும் வைரமும் குவிந்து கிடந்தன. கடைசி திவானாயிருந்து ஒய்வு பெற்ற சர்.டி. ராகவாச்சாரியார் காலம் வரை அரண்மனை யும் சமஸ்தானமும் செல்வச் செழிப்பில்தான் மிதந்தன. சமஸ்தான அந்தஸ்து ஒழிவதற்கு முந்திய கடைசி நவராத்திரி வித்வத் சதளின் போது கூட மன்னரை வாழ்த்திய தமிழ்ப் புலவர்களுக்கும். சங்கீதக் கச்சேரி செய்த இசை வித்வான்களுக்கும். நாட்டியமாடிய நடனக் காரிகளுக்கும் தங்கச் சவரன்களாகத்தான் சன்மானங்கள் எண்ணி வழங்கப்பட்டன. பட்டுப் பீதாம்பரங்களும் விலை 1.யுயர்ந்த காஷ்மீர் சால்வைகளும் போர்த்தப்பட்டன. -

சமஸ்தான திவான் சர். டி. ராகவாச்சாரி ஓய்வு பெறுகிற நேரமும் சமஸ்தானங்கள் அந்தஸ்தை இழக்கிற காலமும் சரியாக நெருங்கி வந்ததினால் மாதம் மூவாயிர ரூபாய் சம்பளத்தில் இனிமேல் நமக்கு ஒரு திவான் அவசிய மில்லை என்ற முடிவுடன் திவானைக் கெளரவமாக ஓய்வு பெறச் செய்து ஒரு பெரிய விடையளிப்பு விருந்தும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் பீமாநாதராஜசேகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/11&oldid=552984" இலிருந்து மீள்விக்கப்பட்டது