பக்கம்:கற்சுவர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. I 0.8 - கற்சுவர்கள்

ளுக்குப் பயன்படும் காட்சிச் சாலைகளில் வைக்கப்பட வேண்டும்' என்றார்கள் அவர்கள்.

"ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ் சாமிநாதனின் நிலைமை பரிதாபகரமானதாக இருந்தது. அவரால் ஊர்க் காரர்களையும் மக்களையும் மீறிக் கொண்டு எதையும் செய்ய முடியவில்லை.

அரண்மனையிலிருந்த பழைய கார்கள், ஏர்க்கண்டி ஷன் பிளாண்ட்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றை ஏலம் எடுத்தவர்கள் வேறு விதமாகவும், லாரிகளிலும் எடுத்துச் சென்றபோது மறியல் செய்தவர்கள் தடுக்க வில்லை. விட்டு விட்டார்கள். ஆனால் லைப்ரரி, மியூலியம், சித்திரச்சாலை, சிற்பக் கூடங்களிலிருந்து எதை யும் ஏலம் எடுத்தவர்களைத் தொடக்கூட விடவில்லை. ஒருநாள் இரண்டு நாள் அல்ல..ஆறு மாதங்கள் வரை இந்தப் போராட்டமும் மறியலும் நீடித்தன.

பத்திரிகைகளில் தொடர்ந்து இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் நாள் தோறும் இருந்தன.

"ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ் சாமிநாதன் எத்த னையோ விதமான செல்வாக்குகளைப் பயன்படுத்திச் சிற்பங்களையும் ஒவியங்களையும் சீமநாதபுரத்திலிருந்து கடத்திக் கொண்டு போக முயன்றும் முடியவில்லை.

பெரிய ராஜாவின் ஒத்துழைப்புக் கிடைத்தும்கூட அவ ரால் எதுவும் செய்ய இயலவில்லை. மறியல்காரர்கள் இராப் பகலாக முறை வைத்துக் கொண்டு லைப்ரரியை யும், சிற்பச் சாலையையும், சித்திரச்சாலையையும், மியூஸி யத்தையும் யாரும் அண்டவிடாமல் காவல் காத்துக் கொண் டிருந்தார்கள். - - - - - - . У.

முடிவில் மறியல்காரர்களுக்குத் தான் வெற்றி கிடைத் தது. மியூலியம், சிற்பக்கூடம், சித்திரச்சாலை ஆகிய வற்றை ஏலம் எடுத்தவரிடம் இருந்து மீட்டு அரசாங்கப் பழம்பொருள் பாதுகாப்பு இலாகா தன் பொறுப்பில் ஏற்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/110&oldid=553082" இலிருந்து மீள்விக்கப்பட்டது