பக்கம்:கற்சுவர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I # 4 கற்கவர்கள்

படி நீ என்னோட மூத்த மகளைக் கட்டிக்கிறே:திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர் போல் அவர் இந்தப் பேச்சை ஆரம்பித்திருந்தார்.

1. அதுக்கெல்லாம் இப்ப என்ன மாமா அவசரம்? ஏற்கெனவே பேசி முடிச்ச விஷயம்தானே?' என்று சற்றே தலைகுனிந்து சிரித்தபடி முகம் சிவக்கப் பதில் சொன்னான் தனசேகரன். சற்று முன் தான் படித்திருந்த சிறுகதையின் விளைாைகத் தன் தந்தையை மாமா பெரிய ராஜா என்று கூப்பிட்டதைக் கூட அவனால் சகித்துக்கொள்ள முடிய வில்லை. ஏதோ காலங்கடத்து போன ஒரு வார்த்தையை அவர் உபயோகப்படுத்தியது போல அவன் உணர்ந்தான். அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது கிராமத் தின் கர்ணம், கிராம முன் சீஃப் ஆகியோருடன் அரண் மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை வந்து சேர்ந் தார். நிலங்கள் பற்றிப் பேச அவர்களை அவர் அழைத்து

அந்திருக்கவேண்டும். .

ဂ္ယီ

காரியஸ்தர் வந்ததும் வராததுமாகக் காலையில் கொடுக்கப்பட்ட காபி டிஃபன் மிகவும் மட்டமாக இருந்த தென்று மாமா புகார் செய்தார். ஒரு சின்ன கிராமத்தின் பி. டபிள்யூ டி இன் ஸ்பெக்ஷன் பங்களாவில் இதைவிட நல்ல காபியையும், டிஃபனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தனசேகரன் உணர்ந்திருந்தான். அதற்காகக் காரியஸ்தரைக் கண்டித்துப் பயனில்லை என்பதையும் அவன் அறிவான், பொதுவில் நகரங்களைவிடக் கிராமங் களில்தான் காபி, சிற்றுண்டி உணவுப் பண்டங்கள் எல்லாம் சுத்தமாகவும் சுவையாகவும், கலப்படமில்லாமலும் இருக் கும் என்கிற காலம் மலையேறிக் கிராமங்களும் லாபம் சம்பாதிக்கக் கற்றுக்கொண்டிருப்பது புரிந்தது. நகரங்களின் சூதுவாதுகள், வஞ்சகங்கள் எல்லாம் கிராமங்களுக்கும் மெல்ல மெல்லப் பரவிக்கொண்டிருந்தது. பல வருடங் களாக மலேசியாவில் எஸ்டேட் உரிமையாளராகச் செல்வச் செழிப்பிலும், சுகபோகங்களிலும் மிதந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/116&oldid=553088" இலிருந்து மீள்விக்கப்பட்டது