பக்கம்:கற்சுவர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 கற்சுவர்கள்

பட்டிருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்க நியாயமில்லை என்பது அப்போது அவனுக்கே தெரிந்தது. மாமா நிலங்கரைகளையும் கரைந்து போனவை தவிர எஞ்சிய சமஸ்தானத்துச் சொத்துச் சுகங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவனோ ஏட்டுச் சுவடி களையும், ஒவியங்களையும், புத்தகங்களையும் சிற்பங்களை யும் காப்பாற்றுவதற்கு அதிக அக்கறை எடுத்தவனாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

காலஞ்சென்ற அவன் தந்தை பரிமேய்ந்த நல்லூரில். செய்தது போல்தான் இங்கும் செய்திருந்தார். நிலங்களை அடமானமாக வைத்துக் குத் தகைக்காரர்களிடமிருந்து அதிகப் பணம் வாங்கியிருந்தார். கணக்குகள் எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தன. எதுவும் தெளிவாக இல்லை.

'நீங்கதானே காரியஸ்தராக இருந்தீங்க மிஸ்டர் சேர்வை? உங்களுக்குக்கூடத் தெரியாமல் எதுவும் நடந் திருக்க முடியாதே! ஒண்ணுமே இல்லாமே துடைச்சி ஒழிச்சி வச்சிட்டுப் போயிருக்கணும். அல்லது நிறையச் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்கணும், இப்படி ரெண்டுங் கெட்டானா வச்சுக் கழுத்தறுக்கப்பிடாது' என்று காரியஸ் தரை நோக்கிச் சத்தம் போட்டார் மாமா. தனசேகரனுக்கு அந்தக் கோபம் அநாவசியமாகப்பட்டது.

"பண விஷயங்களிலே பெரிய ராஜா தாறுமாறாகத் தோணினபடி எல்லாம் வரவு செல்வு பண்ணியிருக்கார். ரசீது கிடையாது. வவுச்சர் கிடையாது. கணக்குக் கிடை யாது. எங்கே எதற்காக வாங்கினோம் என்றும் விவரம் கிடையாது. தப்பு என்மேலே இல்லை. பெரிய ராஜா செய்ததை எல்லாம் பார்த்துப் பல சமயங்களிலே நான் என் வேலையையே விட்டுவிட்டுப் போயிடலாம்னு நினைத்தது உண்டு. காரியஸ்தனா இருந்த என்னைக் கலந்து கொள்ளா மலும் எனக்குத் தெரிவிக்காமலுமே மகா ரா ஜா எத்தனையோ வரவு செலவு பண்ணினதை நான் தடுக்க முயன்றும் முடிஞ்சதில்லை, நான் சொல்லாமலே பெரிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/118&oldid=553090" இலிருந்து மீள்விக்கப்பட்டது