பக்கம்:கற்சுவர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I {} கற்சுவர்கள்

பூபதி. ராஜமான்யமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட சில லட்ச ரூ பாய் க ளு க்கு ள் ேள .ே ய இனிமேல் சமஸ்தானச் செலவுகளையும் சொந்தச் செலவுகளையும்: குறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. திவான் இல்லை என்றாலும் திடீர் என்று அவர் கவனித்து வந்த ஏராளமான வேலைகளையும், .ெ து ப் பு க் க ைள யு ம், யாராவது கவனித்தே ஆக வேண்டியிருந்தது. காரியஸ்தர் என்ற புதுப் பெயரில் ஒரு பழைய காலத்து வக்கீலை ராஜா நியமித்திருந்: தார். அரண்மனைக் காரியஸ்தர் என்ற பெயரை ஏற்று உத்தியோகம் பார்த்து வந்த அவருக்குக் கீழே இரண்டு கிளார்க், ஒரு டைபிஸ்ட், ஒர் அகெளண்ட்டெண்ட், ஒரு கேவியர், ஒரு அட்டெண்டர், ஒரு மெஸஞ்சர் ஆகிய ஆறு ஏழு பேர் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. பெரிய மகாராஜா மாரடைப்பால் காலமானவுடனே அப்போது மலேசியாவில் ஈப்போவில் இருந்த அவருடைய மூத்தகுமாரன் தனசேகரனுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதே அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைதான்! தனசேகரன் உடனே வருவதாகத் தெரிவித்ததுடன் காரியஸ்தரைப் பீமநாதபுரத்திலிருந்து காரோடு மீனம்பாக்க்ம் விமான நிலையத்திற்கு வரச் சொல்லியும் வேண்டிக் கொண்டிருந்தான்.

தனசேகரன் வருவதோடு அவனுடன் காலஞ்சென்ற மகாராஜாவின் மைத்துனரும் தன்சேகரனின் மாமாவான டத்தோ தங்கப் பாண்டியனும் மலேயாவிலிருந்து கூடவே. புறப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரே கோலாலம்பூரிலிருந்து சென்னை வருகிற பிளைட்டில்' இருவருக்கும் இடம் கிடைக்க்ாததால் ஆஸ்திரேலியாவி லிருந்து கோலாலம்பூர் வந்து அங்கிருந்து கொழும்பு செல்லுகிற ஒரு வெளிநாட்டு விமானத்தில் இடம்பிடித்துக் கொழும்பிலிருந்து .ெ சன் ைன வ ந் து விடுவதாகத் தனசேகரனே மறுபடி டெ லி போனி ல் கூப்பிட்டு: அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/12&oldid=552985" இலிருந்து மீள்விக்கப்பட்டது