பக்கம்:கற்சுவர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

நா. பார்த்தசாரதி 119

"அரண்மனை லைப்ரரி. ஐம்பொன் சிலைகள் அடங்கிய விக்ரக சாலை, வாகனங்கள் உள்ள வாகன சாலை எல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்' கிறது. அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன் காரியஸ்தரே?' என்றான் தனசேகரன்,

மன்னிக்க வேண்டும் பெரியவர் இந்த அரண், மனையை விட்டுவிட்டுப் போயிருக்கிற நிலையில் எதைப், பற்றியும் இப்போது எதுவும் சொல்லுகிறாற்போல், இல்லை. எங்கே எதை எந்த அவசரத் தேவைக்காக விற்றி, ருப்பாங்கன்னு ஒண்னும் சொல்ல முடியாது. இந்தக் கால கட்டத்திலே ஒரு சமஸ்தானத்தோட காரியஸ்தரா, மாட்டிக்கிட்டிருக்கக் கூடாதுன்னு நானே பல தடவை என். வேலையை விட்டுட நினைச்சிருக்கேன். பெரிய ராஜா எதையாவது எனக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ யாருக் காவது-விற்றால் அதை நான் ஏன்னும் எதற்குன்னும் தட்டிக் கேட்க முடியாது' என்று குறைப்பட்டுக் கொண்.

டார் காரியஸ்தர்.

அவர் அதைச் சொல்லிய விதம், "என்னைப்போய்த் தொந்தரவு செய்கிறீர்களே? நான் என்ன செய்வேன்?" என்பது போல இருந்தது. தனசேகரன் மேற்கொண்டு. அப்போது அவரை எதுவும் கேட்க விரும்பவில்லை. இரண்டு நாள் ஒரு வேலையுமின்றி மெளனத்தில் கழிந்து: போயின.

இதற்கிடையில் ஒரு நாள் காலைத் தபாலில் சென்னை யிலிருந்து நடிகை ஜெயநளினி தனசேகரனுக்கு வக்கீல். நோட்டீஸ் அனுப்பி இருந்தாள். அந்த ரிஜிஸ்தரைக் கையெழுத்திட்டு வாங்கிய சுவட்டோடு அதைக் கொண்டு. வந்து மாமாவிடமும் தனசேகரனிடமும் படித்துக் காண்; பித்தார் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை. -

அவளுக்கு ஒரு எழவும் தெரியாது. இதெல்லாம் செய்யச் சொல்லி அந்தக் காலிப்பயல் கோமளிஸ்வரன்தான் சொல் லிக் கொடுத்திருக்க வேண்டும். முடிந்த மட்டில்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/121&oldid=553093" இலிருந்து மீள்விக்கப்பட்டது