பக்கம்:கற்சுவர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 卫穹品

பல பக்கங்கள் அங்கங்கே கிழிக்கப்பட்டிருந்தன. சில பக்கங் கள் பயங்கரமான முறையில் மையால் அடிக்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருந்தன. எல்லாம் அப்பாவின் வேலை யாகத்தான் இருக்க வேண்டும் என்பது யாரும் சொல்லா மலே தனசேகரனுக்குப் புரிந்தது. மாமா மிகவும் கோய் மாகக் காணப்பட்டார், அரண்மனைச் சொத்துக்களின் எந்தப் பகுதியையும், எந்தப்பிரிவையும் அப்பா சீரழிக்கா மல் விட்டு வைக்கவில்லை என்பது இப்போதும் தெரிந்தது. நீர் என்னய்யா காரியஸ்தர்? வேலை ப்ார்த்த இடத் தின் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் சும்மா இருந்திருக்கிறீரே. இதை எல்லாம் உமது உத்தியோகக் கடமையாக நீர் செய்திருக்க வேண் டாமா?' என்று காரியஸ் தரைக் கேட்டார் மாமா,

வேலியே பயிரை மேயத் தொடங்கினால் யார்தான் சார் அதைத் தடுத்துக் கட்டிக்காக்க முடியும் என் நிலைம்ை பிலே நீங்க இருந்திருந்தால்தான் இதை எல்லாம் நீங்க புரிஞ்சுக்க முடியும்? நான் சம்பளம் வாங்குகிற உத்தியோ கிஸ்தன். எனக்குச் சம்பளம் கொடுக்கிற மகாராஜா ஒரு பொருளைத் திருட்டுத்தனமாக விற்கிறப்பவோ, சீர்ழிக் கிறப்பவோ, அவரு எங்கிட்டச் சொல்லிட்டுத்தான் அன்த செய்யனும்னு என்ன அவசியம்? அப்படி மகாரா ஜர்ல்ே: அதை எல்லாம் துணிஞ்சு செய்யறப்போ அதைத் த்ட்டிக் கேட்கி எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? இதை எல்லாம் கொஞ்சங்கூட யோசிச் சுப் பார்க்காமே நீங்கத் திரும்பத் திரும்ப என்னைக் கேள்விக் கேட்டுப் பிரயோஜனம் இல்லை' என்று சேர்வைகாரரும் கொஞ்சம் அழுத்த மாகவே மாமாவுக்குப் பதில் சொன்னார்.

வைரங்களும், வைடூரியங்களும், ரத்தினங்களும், மரம் கதங்களும், தங்கம் வெள்ளிப் பண்டங்களும் நிறைந்த, தென்று ஊரறிய உலகறியப் புகழப்பட்டிருந்த பீமநாதபுரம் கருவூலத்தை அநேகமாகக் காலி செய்து துடைத்து வைத். திருந்தார் காலஞ்சென்ற மகாராஜா, சில விலையுயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/125&oldid=553097" இலிருந்து மீள்விக்கப்பட்டது