பக்கம்:கற்சுவர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி †. 27

தன் தாயின் சகோதரரும் தன் மாமனுமாகிய திங்க பாண்டியன் அந்த டைரிகளைப் படிக்காதது கூட ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று என்று தனக்குத்தானே இப்போது நினைத்துக் கொண்டான் தனசேகரன்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் பீமநாத புரம் சமஸ்தானத்தில் அடிக்கடி வெள்னைக்கார கவர்னர் களுக்கும். அதிகாரிகளுக்கும் பிரமுகர்களுக்கும் விருந்துப சாரங்கள் நடப்பது என்பது சர்வசகஜம், தனசேகரன் அவைகள்ைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சமஸ்தானத்துப் புலவர்கள் பாடியிருந்த பழங்காலத் தனிப் பாடல்கள் பலவற்றைப் புரட்டினால்கூட அவர்கள் தமிழே தெரியாத எல்லிசுத் துரை மேலும் ஆல்பர்ட்டுத் துரை மீதும் ஜான்சன் துரை மீதும்,வெண்பாக்களையும் விருத்தங் களையும் பாடிப் புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அவற்றில் சிலவற்றைப்பற்றி நினைத்தால் தனசேகரனுக்கு இப்போது கூடச் சிரி ப் பு வந்துவிடும். எல்லீசுத்துரை மீதும் ஆல்பர்ட்டுத் துரை மீதும் மயங்கிய தமிழ்ப் பெண்கள் வச மிழந்து நிலைகுலைந்து போய் மானையும், மயிலையும். கிளியையும், குயிலையும் அந்தத் துரைகளிடம் தூது சொல்வதற்கு அனுப்புவதாக,எல்லாம் கூடப் பாடித் தள்ளி இருந்தார்கள். தமிழ்ப் பெண்கள் உண்மையில் அப்படி எல்லாம் நினைத்தார்களோ இல்லையோ, தமிழ்ப் பெண் களை வெள்ளைக்காரத் துரைகளோடு சம்பந்தப்படுத்திப் புலவர்கள் இப்படி எல்லாம் எண்ணித் தங்களையும் தங்கள் எஜமானர்களாகிய சமஸ்தானாதிபதிகளையும், அவர்களின் அபிமானத்துக்குரிய வெள்ளைக்கார விருந்தினர்களையும் திருப்திபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றி யது. அந்தக் காலக்கட்டத்து டைரிகளைப் படித்துக் கொண்டு வந்தபோது தந்தை எழுதியிருந்த சில குறிப்புக் கள் தனசேகரனுடைய மனத்தைப் பெரிதும் புண் படுத்தின. . . . .

வெள்ளைக்கார கவர்னர் ஒருவன் தன் மனைவியோடு, ஒய்வெடுப்பதற்காகவும், பீம்நாதபுரம் சமஸ்தானத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/129&oldid=553101" இலிருந்து மீள்விக்கப்பட்டது