பக்கம்:கற்சுவர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 கற்சுவர்கள்

சுற்றி இருந்த காடுகளில் வேட்டையாடுவதற்காகவும் ஒரு வாரகாலம் சமஸ்தானத்தில் வந்து கெளரவ விருந்தினனாக தங்கி இருந்த காலத்தில் அந்த நாட்குறிப்புக்கள் எழுதப் பட்டிருந்தன. பொதுவாக எழுத்தில் வடிப்பதற்குக் கூச வேண்டிய அந்த விஷயத்தைத் தன் தந்தை எப்படி மனம் அருவருப்பு:அடையாமல், கைகூசாமல் எழுதினார் என்பதே தனசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதன் காரண மாகத் தொடக்க முதலே தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது இப்போது தனசேகரனுக்கு ஒரளவு புரியத் தொடங்கியது.

பழைய நாட்குறிப்பில் தந்தை பின்வருமாறு எழுதி யிருந்தார் :- - -

ஏற்கெனவே கடிதமூலமாக அறிவித்திருந்தபடி எல்லிசுத்துரை தன் அழகிய இளம் மனைவியோடு பீமநாத புரம் வந்து முகாம் செய்துவிட்டான். அவனையும் அவன் மனைவியையும் நன்றாக உபசரிக்க வேண்டும்; அவர்களை முறைப்படி உபசரிப்பதற்கு என் மனைவியும் பட்டத்து ராணியுமாகிய வடிவு பெரிய இடையூறாக இருக்கிறாள். வடஇந்திய சமஸ்தானாதிபதிகளில் சில்ர் செய்திருப்பது போல் லண்டனில் இரண்டு. மாதம் தங்கி யாராவது ஒரு வெள்ளைக்காரக்குட்டியை நானும்கூட இழுத்துக்கொண்டு வந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் போலி ருக்கிறது. இங்கே சமஸ்தானத்தின் பட்டத்து ராணி என்ற பெயரில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிற பத்தாம் பசலிக்கு ஓர் இழவும் தெரியவில்லை. துரைக்கும் துரைச்சாணிக்கும் முன்னால் இந்த நாட்டுப் புறத்துக் கட்டையை வைத்துக் கொண்டு நான் வீணே தலைகுனிய வேண்டியிருக்கிறது. இவளுக்கு அவர்களோடு ஒரு வார்த்தை அரை வார்த்தை பேசுவதற்குக்கூட இங்கிலீஷ் அறவே தெரியவில்லை. டேபிள் மேனர்ஸ் பூஜ்யம். துரை ஆசையோடு அருகே வந்து கைகுலுக்குவதற்குக் கையை நீட்டினால் பயந்து கூசி நடுநடுங்கிக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பத்தடி பின் வாங்கி நடந்து சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/130&oldid=553102" இலிருந்து மீள்விக்கப்பட்டது