பக்கம்:கற்சுவர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 & 9

கைகூப்புகிறாள் இவள். துரையின் மனைவி என்னோடு கைகுலுக்கிவிட்டு என் பக்கத்தில் அமர்ந்து குஷாலாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது இவள் பதிலுக்குத்துரையின் பக்கத்தில் அ ம ர் ந் து அப்படிப் பேசிக கொண்டிருந்தால்தான் நன்றாகவும், மரியாதையாகவும், முறையாகவும் இருக்கும். இவளோ படிதாண்டாப் பத்தினி யாக நடந்து கொள்கிறாள். எல்லாரும் குடித்துக் கொண் டிருக்கும்போது இவள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக் கிறாள். விஸ்கி வாடையே இவளுக்கு ஆவதில்லை. சரி: விஸ்கிதான் வே ண் டாம், தொலையட்டும். ஒரு மரியாதைக்கு 'டோஸ்ட் சொல்லி சீர்ஸ் கூறிக்கொண்டு கிளாஸ்களை நெருக்கிப்பிடிக்கும்போது கூடப் பிடிப்பதற். காக ஒரு கிளாசில் கொஞ்சம் பீரையோ, ஒயினையோ ஊற்றிக் கொண்டு உட்காரச் சொன்னால்கட அதற்கும் மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாள். துரை ஆசைப் படுகிறானே என்று நான் முயல் கறியும், மான் கறியும் பண்ணச் சொல்லி டைனிங் டேபிளில் வைத்தால் அன்றைக்குப் பார்த்து இன்னிக்குச் சோமவார விரதம்" எனக்குத் தனியாக அவல் உப்புமா பண்ணச் சொல்லியிருக். கிறேன் என்கிறாள். இந்த நாட்டுப்புறத்தைக் கட்டிக் கொண்டு என்ன பண்ணித் தொலைப்பது? இந்த நிலைமை புரியாமல் துரை என்னை உயிரை எடுக்கிறான். நேற்றிரவு. கூடச் சீட்டாடிக் கொண்டிருக்கும்போது நமக்குள் என்ன வித்தியாசம் இருவரும் மிகவும் நெருங்கிப் பழகி விட்டோம். எனக்கு என் மனைவியின் முகத்தையே தினம் பார்த்து அலுத்துப் போயிற்று. அதேப்ோல உனக்கும் உன் மனைவியின் முகம். உடல் எல்லாம் தினம் பழகிப் பழகி அலுத்துப் போயிருக்கலாம். இரண்டு பேருக்குமே ஒரு புதுவிதமான சுகானுபவமாக இருக்கட்டுமே? இன்றிரவு. மட்டுமே இந்த ஏற்பாடு, உன் மனைவி என்னோடு உறங். கட்டும். என் மனைவி உன்னோடு உறங்கட்டும். எனக்கு ஓர் "இந்தியப் பெண்ணின் சுகம் கிடைக்கட்டும், உனக்கு ஓர் ஆங்கிலேயப் பெண்ணிடம் சுகம் கிடைக்கட்டும்' என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/131&oldid=553103" இலிருந்து மீள்விக்கப்பட்டது