பக்கம்:கற்சுவர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:30, கற்சுவர்கள்:

ஆசையோடு குழைந்து கெஞ்சிக் கேட்டான். எனக்குப் பூரண சம்மதம். துரையின் மனைவியைப் பற்றி நீறுபூத்த" நெருப்பு மாதிரி என்னுள்ளே அவளைப் பார்த்த மறுகண்த் விருந்து இப்படி ஓர் ஆசைத் தீ மனத்தில் பற்றி எரிகிறது. அந்த வெள்ளைக்காரியின் ரோஜா இதழ்களை அப்படியே கடித்து முழுங்கிவிடத் தவிக்கிறேன் நான். தன் மனைவிக்கு இந்த ஏற்பாட்டில் முழு உடன்பாடு உண்டு என்றும் இது அவளுக்கு வழக்கம்தான் என்றும் துரை என்னிடம் உத்தர வாதம் அளிக்கிறான். அவர்கள் இருவருமே ஃப்ரீமேலான் கிளப்புகளில் எல்லாம் உறுப்பினர்களாம். இம்மாதிரிப் பழக்கம் அவர்களுக்கு ஒன்றும் புதுமை. இல்லையாம். ஆனால் இதையெல்லாம் இங்கே என் பட்டத்து ராணி. என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டிருக்கிற கோட்டா .ணிடம் எப்படி நான் எடுத்துச் சொல்லி விளக்குவது?"

-இந்த இடத்தைப் படிக்கும்போது தனசேகரனுக்கு இரத்தம் கொதித்தது. தந்தை மட்டும் இப்போது உயி ரோடு இருந்திருப்பாரேயானால் அவனே ஒடிப்போய் அவர் கழுத்தை நெரித்துத் திருகி அவரைக் கொலை செய்திருப் பான். ஆனால் அவர் ஏற்கனவே செத்துப்போய்த் தொலைந்திருந்தார். தாங்க முடியாத எரிச்சலோடு இரண்டு தினங்கள் தள்ளி அந்த டைரியை மறுபடி புரட்டி

னான் தனசேகரன். . - ۰ -

"துரையின் ஆசையையும், என் ஆசையையும் ஒருசேரப் நிறைவேற்றிக் கொள்ள இன்று சரியான வழி புலப்பட்டு விட்டது. பீமநாதபுரம் சமஸ்தானத்தில் இந்த சோமவார விரதக்காரி ராணியாக இருந்து தொலைக்கிறவரை இந்த ஊர் எல்லையில் அது மாதிரி எதுவும் நடக்க முடியாது. காதும் காதும் வைத்தாற்போலத் துரையையும், துரையின் மனைவியையும் நம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பரிமேய்ந்த நல்லூருக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டால் இந்த ஆசை நிறைவேறிவிடும். பரிமேய்ந்த நல்லூரில் நமக்கு வைப்பாட்டி முறையாக வேண்டிய நம் வார்த்தைக்குக் W கட்டுப்பட்டு அடங்கின தேவதாசிக் குடும்பங்கள் பல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/132&oldid=553104" இலிருந்து மீள்விக்கப்பட்டது