பக்கம்:கற்சுவர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 131

உள்ளன. அதில் மிக அழகிய உடற்கட்டுள்ள ஒருத்தியை இரவு டின்னருக்கு அழைத்துத் துரைக்கு முன்னாலேயே ஒரு டான்ஸும் ஆடச்சொல்லி அவனோடு படுக்கையறைக்குள் தள்ளி விட்டுவிட்டு இந்தப் பக்கம் நாம் துரை அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வேண்டியது தான். இதை மிகவும் சாமார்த்தியமாகச் செய்து முடிக்க. வேண்டும். - . . . . . . . . .

துரைக்கு இதில் ஒரு சிறிதும் சந்தேகம் வந்து விடக் கூடாது. பரிமேய்ந்த நல்லூர்த் தேவதாசி தன் அந்தஸ்' துக்குக் குறைவான ஜோடியோ என்று துரை நினைத்து விடாமல், அவர்களும் எனக்கு இளையராணிகள் முறைக் தான் ஆகவேண்டும்!" என்று துரையிடம் இன்றிலிருந்தே பீடிகை போட்டுச் சொல்லி அவனை அந்த ஏற்பாட்டுக்குத் தயாரான மனநிலையில் கொண்டுவந்து வைத்துவிட வேண்டும். அதைச் செய்வதில் சிரமம் ஒன்றும் இராது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு வெள்ளைக் காரியின் உடலுக்காக எவ்வளவு காய்ந்து போய்த் தவிக் கிறேனோ அதைவிட அதிகமாக ஒர் இந்தியப் பெண்ணின் கறுப்பு உடலுக்காகத் துரை தவித்து உருகிக் கொண்டிருக் கிறான் என்பதை அவனுடைய அன்றாடப் பேச்சுக்களி, லிருந்தே நான் தெரிந்துகொள்ள முடிகிறது."

為。 球 岑、

தன் தந்தையின் அந்தரங்க நாட்குறிப்புக்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அறவே விலகிப்போய் மிகமட்டமான பெண் தரகன் ஒருவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கை வரலாற்றை ஏதோ ஒருவகை, நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டுப் படித்துக்கொண்டிருக், கிறோமோ என்று எண்ணுகிற மனநிலைக்கு இப்போது வந்திருந்தான் தனசேகரன். இவையெல்லாம் ஜாடை மாடையாகத் தெரிந்து அல்லது இப்படிப்பட்ட விவரங். களும் இந்த நாட் குறிப்புக்களில் இருக்கக்கூடும் என்று. எதிர்பார்த்து அதுமானம் செய்து கொண்டுதான் மாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/133&oldid=553105" இலிருந்து மீள்விக்கப்பட்டது