பக்கம்:கற்சுவர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 8 8 கற்சுவர்கள்

இவற்றைத் தன்னை மட்டும் படிக்கச் சொன்னாரா அல்லது. சாதாரணமாகத்தான் தன்னை இதைச் செய்யச் சொன் ாைரா என்று புரிந்து கொள்ள முடியாமல் இப்போது: அவனே திணறினான். . -

குடும்பப்பாங்கான நெற்றியில் இளங்கீற்றாகத் திரு. நீறும் குங்குமமும் துலங்கும் தன் தாயின் லட்சுமீகரமான முகம் இப்போது தனசேகரனின் மனக்கண்ணில் தெரிந்தது. ஏனோ அதையடுத்து உடனிகழ்ச்சியாக அவனுக்கு மதுரை மீனாட்சி அம்மனின் முகமண்டலம் ஞாபகம் வந்தது. அப்போது அப்பாவின் முகம் அகப்படுமானால் அதல் உடனே காறித் துப்பவேண்டும் போலவும் ஆத்திரமாக, இருந்தது அவனுக்கு. அவருடைய ஆரம்பகால நாட் குறிப்புகளில் இவ்வாறு பல ஆபாசமான விவரங்கள் நிறைய. இருந்தன. பின்னால் வரவர இதே விஷயங்கள் சினிமா உ ல கத்தோ டு சம்பந்தப்பட்டவையாக எழுதப். பட்டிருந்தன. - -- . . .

சென்னைப் பட்டணத்தில் அவ்வப்போது பிரபலமாக இருந்த ஒவ்வொரு சினிமாக்காரிக்கும் ஒரு நாகரிகத் தரகன் மூலம் அறிமுக்ம் கிடைத்து அவர்களோடு இவர் சரசமாடிய விலைகள் எல்லாம் இருந்தன. தன் தாயை அவர் எவ்வளவு: தூரம் படிப்படியாக ஒசைப்படர்மல் அவம்ானப்படுத்திக் கொன்றிருக்கிறார் என்பது அந்த நாட்குறிப்புக்களிலிருந்து அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு மனவேதனைகளையும், குறைகளையும், பச்சைத் துரோகங்களையும் மனத்திற். குள்ளேயே வைத்துக்கொண்டு மறுகி உள்ளேயே வேதனை யால் வெந்துதான் தன் அன்னை மரணமடைந்திருக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவள் உயிரோடிருந்தவரை என்றும் எந்த விநாடியிலும், எவர். முன்னிலையிலும் தன் தந்தையைக் குறைத்தோகுலைந்தோ பேசியிருக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். தாயின் அந்தத் தியாகம், அந்த விட்டுக் கொடுக்காத பெருந்தன்மை எல்லாம் இப்போது அவனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/134&oldid=553106" இலிருந்து மீள்விக்கப்பட்டது