பக்கம்:கற்சுவர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி y 37

கொண்டு சென்னைக்கு ஓடினார் என்று தனசேகரனா' லேயே நம்ப முடியாமல் இருந்தது. இப்படிப் பல பெண் களின் அழகிய இளமை வாழ்க்கையையும் பாழாக்கி விட்டுத் தான் தந்தை இறந்து போயிருக்கிறார் என்பது அவன் மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை உண்டாக்கி இருந்தது.

"சின்னராஜா இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலியே?’ ’

"அதுக்கென்ன? எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்!" "சரி! நான் எப்போ எங்கே வந்து பார்க்கணும்னு சொன்னால் தேவலை." .

'நீங்க வரவேண்டாம்! அது முறையும் இல்லை. நானே அங்கே வந்து எல்லா இளைய ராணிகளையும் சந்திச்சுப் பேசணும்னுதான் நினைச்சிருக்கேன், அப்படிப் பேசறதுக்கு வர்றப்ப நிச்சயமா உங்களையும் பார்ப்பேன்."

தனசேகரனின் பொதுவான பதில் அந்த இளைய ராணிக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று அவள் முகத்தி லிருந்து தோன்றியது. அவள் முகபாவத்திலிருந்தே அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தனசேகரனோ, வேண்டு மென்றேதான் பதிலைப் பொதுப்படையாக்கிச் சொல்லிருந் தான் மாமா அவனை இது விஷயமாக முன்பே எச்சரித்து வைத்திருந்தார்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதே. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது. யாரையும் எதற்காகவும் தனித் தனி கயாகச் சந்திக்காதே. ஊர் வாய் பொல்லாதது, கண்டபடி பேசுவார்கள். அவர்களைத் தனித் தனியாகச் சந்திப்பதால் வேறு புதிய பிரச்னைகள் உண்டாகும். என்னிடம் அப்படிச் சொன்னான் இப்படிச் சொன்னான்’ என்று இல்லாததை யும் பொல்லாததையும் அவர்களே பேசிக்கொள்வார்கள். ஜாக்கிரதையாயிரு' என்று மாமா சொல்வியிருந்தது சமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/139&oldid=553111" இலிருந்து மீள்விக்கப்பட்டது