பக்கம்:கற்சுவர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 4 3

மான காம்பன்லேஷன், வாரிசு, பற்றிய ஃபைல்களை' வைத்து ஏதேதோ கணக்குகளைப் போட்டுக் கொண்டி ரு ந் த ா ர் க ள். தனசேகரனைப் பார்த்தவுடனேயே அவனிடம்,

'இந்தக் கூலிபட்டாளத்துக்குப் பணத்தைக் கொடுத்து வெளியே அனுப்பறவரை நமக்கு ஒரு வேலையும் ஓடாது. இதை முதல்லே முடிச்சாகணும்' என்றார் மாமா.

"ஒரு நாள் பொறுத்துக்குங்க, நாளைக்கு அல்லது நாளைக் கழித்து மறுநாள் இதை முடித்துவிடலாம். நானும் அதுக்குள்ளே மீதமுள்ள டைரிகளைப் படிச்சு முடிச் சிடறேன்' என்றான் தனசேகரன். .

மாமாவுக்கும் காரியஸ்தருக்கும் தனசேகரனின் இந்த மறுமொழி ஆச்சரியத்தை உண்டாக்கியது. தங்களைப் போலவே இதில் மிகவும் அவசரம் காட்டிய தனசேகரன் இப்போது ஏன், பின்வாங்கி ஒத்திப்போடுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தனசேகரனோ டைரிகளைப் பார்க்க வேண்டும் என்று சாக்குபோக்காகச் சொல்லியிருந்: தாலும் உண்மையில் அவன் மனதுக்குள் இருந்தது என்னவோ கோவிலில் சந்தித்த இந்த இளையராணியின் சந்திப்பு முடிவதற்கு முன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க: வேண்டாம் என்பதுதான். அவள்மேல் அவனுக்கு ஏற்பட் டிருந்த கருணைதான் இந்தப் பிரச்னையை மேலும் இரண்டு: நாட்களுக்குத் தள்ளிப் போட வைத்திருந்தது. -

12

மரிமா சிறிதளவு மன்றாடிக் கூடப் பார்த்தார். ' என் னப்பாது? திடீர்னு எல்லா ஏற்பாட்டையுமே மாத்தறியே. அரண்மனை கஜானாவிலே செப்பாலடிச்ச சல்லி இல்லாம. இருந்தும் கூட நான் என்னோட சொந்தக் காசை மாத்தில் வச்சுக்கிட்டு உன் பிரச்னைகளைத் தீர்க்கலாம்னு பார்த்தா அதையும் ஒத்திப் போடறியே? ஒரு நாளைக்கு இவங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/145&oldid=553117" இலிருந்து மீள்விக்கப்பட்டது