பக்கம்:கற்சுவர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏4盘 கற்சுவர்கள்

தீனிச் செலவு என்ன ஆகும்னு பார்த்தாக்கட் இவர்களை அரண்மனையிலே வச்சுக் கட்டிக்காக்கிற ஒவ்வொரு நிமிஷ மும் தண்டச் செலவுதான்னு நீயே புரிஞ்சுக்குவே தனசேகரன் !' -

'நீங்க சொல்றதை அப்படியே நூற்றுக்கு நூறு ஒத்துக் கறேன் மாமா. ஆனாக் கொஞ்சம் பொறுத்துக்குங்க. இந்த டைரிகளைத் தேடிப் பிடிச்சுக் கண்டெடுத்துப் படிக்கச் சொன்னதே நீங்கதான். படிக்கத் தொடங்கினதோ தொடங்கியாச்சு...முழுக்கப் படிச்சு முடிச்சாச் சுன்னா இந்த இளையராணிகள் பிரச்னையைப் பற்றியே ஏதாச்சும் முடிவு தெரியலாம். அதுக்குத்தான் சொன்னேன்' என்று இனசேகரன் பதற்றமின்றி நிதானமாக விஷயத்தை விளக்கி யதும் மாமா வழிக்கு வந்தார். . . ...

  • ...*

காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை மாமனுக்கும்

r ԱԵ سے ۔یہ -

மருமகனுக்கும் இடையே நடந்த இந்த விவாதத்தில் குறுக் கிட விரும்பவில்லை- சும்மா அதைக் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தார். தனசேகரன் கோவிலில் சந்தித்த இளையராணியைப் பற்றி மாமாவிடம் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. அதன் மூலம் அவருக்கும் தனக்கும் இடை யில் வீண் விவாதமும் வம்புப் பேச்சும்தான் வளரும் என்று தினைத்தான் அவன். ஆனால் எப்படியும் அன்று மாலைக் குள் அந்த இளையராணியை சந்தித்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டுவிட மனத்துக்குள் தீர்மானித்துக் கொண்டான். மாமா மேலே எதுவும் விவாதம் வைத்துக் கொள்ளாமல் அவனை உடனே திருப்பி அனுப்பி விட்டார்.

- 'சரி? அப்படியானால் நீ எதுவும் செய்ய வேண்டாம். முதல்லே போய் முழு மூச்சா உட்கார்ந்து அந்த டைரிகளை எல்லாம் படிச்சு முடி. மத்ததை எல்லாம் பின்னாலே பார்த்துக்கலாம்' என்று அவரே கூறிவிட்டதனால் அவன் அங்கிருந்து புறப்படுவது சுலபமாயிற்று. அவன் அரண்மனை அலுவலகத்திலிருந்து வெளியேறிய போது வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/146&oldid=553118" இலிருந்து மீள்விக்கப்பட்டது