பக்கம்:கற்சுவர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 149

யில்லேன்னா தயவு பண்ணி இன்னும் அரைமணி நேரம் மட்டும் நீங்க தாமதிச்சால்கூட இங்கேயே நான் அவங்களை வரச் சொல்லிடுவேன். இங்கே வந்து சந்திக்கிறதிலே யாருக் கும் எந்தப் பிரச்னையும் இல்லே! இந்த இளையராணி ஜோசியம், நாள், நட்சத்திரம் பார்க்க இங்கே எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போறது வழக்கம்தான்."

அப்போது தனசேகரனுக்கும் குருக்கள் சொல்லிய யோசனை சரி என்றே பட்டது. அவரிடம் சரி என்று சம்ம தித்தபின், ஆனால் ஒன்று அந்த இளைய ராணியோடு பேசி முடித்தபின் நான் இங்கிருந்து வெளியேறிச் சென்ற பிறகு அரைமணி நேரமோ, முக்கால் மணி நேரமோ இடைவெளி விட்டுத் தாமதித்துப் பின்தங்கித்தான் அவர் கள் இங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. நான் தற்செயலாக இங்கே வந்து போனது போல இருக்க வேண்டும். அவங்களும் தற்செய லாக இங்கே வந்து போனது போல இருக்கவேண்டும்" என்றான் தனசேகரன். .

குருக்கள் அதற்குச் சம்மதித்தார். அரண்மனை அந்தப் புரத்திற்கும் குருக்கள் வீட்டிற்கும் சகஜமாக வந்து போகிற வேலைக்காரி ஒருத்தி மூலமாக உடனே தகவல் சொல்லி யனுப்பப்பட்டது. அந்த வேலைக்காரி நம்பகமானவள் என்றும் விஷயம் பரம ரகசியமாக இருக்கும் என்றும் குருக்கள் உத்தரவாதம் அளித்தார். அவர் சொல்லி அனுப்பியபடியே அந்த இளையராணியை அழைத்துக் கொண்டு வேலைக்காரி பத்தே நிமிஷங்களில், குருக்கள் விட்டுக்கு வந்துவிட்டாள். -

. அடிக்கடி ஜோஸியம், நாள். நட்சத்திரம், சோமவாரம், கார்த்திகை விரதம் பற்றி அறிய அந்த இளையராணி தன் வீட்டுக்கு இப்படி வந்து போவது வழக்கம் என்பதால் இதில் யாருக்கும் சந்தேகம் வராது என்று குருக்கள் மீண்டும்

10 سس۔ یمن

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/151&oldid=553123" இலிருந்து மீள்விக்கப்பட்டது